Endhiran: From Kollywood to Hollywood


Sun Pictures is all set to make director Shankar's dream of making it to Hollywood come true. It's on the verge of a tie-up with HBO which will see’ Endhiran’ being released in the West simultaneously.
‘Endhiran’ will be subtitled in English and released in Hollywood simultaneously, making it the biggest opening for the film industry. Rajinikanth's 'Shivaji' had raked in good money overseas and has made things easier for Shankar.
With promotion in full swing, the film is progressing well after having suffered due to the recent cyclone in Chennai. The crew is about to finish the shoot at VIT University College in Vellore. The next stop is Top Slip and Valparai and the crew will then move to Kulu Manali next year.

ரஜினி-ஐஸ்வர்யாராய் நடிக்கும்


வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் 'எந்திரன்' படக்கதை என்ன? என்பதை மாலை நாளிதழ் இன்று வெளியிட்டுள்ளது டைரக்டர் ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி-ஐஸ்வர்யாராய் நடிக்கும் 'எந்திரன்' படப்பிடிப்பு மள, மள வென நடந்து வருகிறது. இந்தியாவின் அதிகபட்ச, பிரமாண்ட பட்ஜெட் படமான 'எந்திரன்' படக்கதையை எவ்வளவோ ரகசியமாக பாதுகாத்து வந்தும் விஷயம் வெளியே கசிந்து விட்டது. 'எந்திரன்' படக்கதை இதுதான்!
ரஜினி ஒரு விஞ்ஞானி. அவர் புதுவகையான ஒரு 'ரோபோ'வை கண்டு பிடிக்கும் முயற்சியில் இருக்கிறார். வரும் 2,200ம் ஆண்டில் 'ரோபோ' எப்படி இருக்கும்? அது என்னவெல்லாம் செய்யும் என்பதை கற்பனையாக வைத்து, முடிவில் அவர் ஒரு எந்திர மனிதனை பிரமிக்கும் வகையில் கண்டு பிடித்து விடுகிறார். இதன் மூலம் அவர் உலகிலேயே மிகவும் தலை சிறந்த விஞ்ஞானி என்ற பட்டத்தை பெறுகிறார். ரஜினி கண்டுபிடித்த 'ரோபோ' எந்திரமும் ரஜினி போலவே உருவம் கொண்டது என்பது விசேஷ அம்சமாகும். இதன் மூலம் உலக நாடுகளில் ரோபோ தயாரிப்பு விஞ்ஞானிகளில் ரஜினி தவிர்க்க முடியாத மாபெரும் விஞ்ஞானியாக புகழ் பெற்று விடுகிறார்.
இதற்கிடையே ரஜினி-ஐஸ்வர்யாராய் இடையே காதல் மலர்கிறது. இருவரும் ஆடிப்பாடி மகிழ்கின்றனர். இந்த நிலையில் ரஜினி கண்டு பிடித்த 'ரோபோ'வாலேயே அவரது காதலுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. ஆமாம்! அந்த அரிய வகை ரோபோவை ஒரு வில்லன் கடத்திக் கொண்டு போய் விடுகிறான். வில்லன் கையில் சிக்கிய 'ரோபோ' அவன் இஷ்டப்படி நடக்க ஆரம்பித்து விடுகிறது. ரஜினி பேச்சை கேட்க மறுத்துவிடுகிறது. இதன் மூலம் ஐஸ்வர்யா ராய் காதல் உட்பட ரஜினி வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சினையாகி விடுகிறது. ஒரு வழியாகப் போராடி, முடிவில் அந்த ரோபோவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறார் ரஜினி.
இந்தப் படத்தில் ரஜினி, ஐஸ்வர்யாராய் சந்திப்பு மற்றும் காதல் காட்சிகள் மட்டுமே 'அவுட்டோர்' படப்பிடிப்புகளில் நடத்தப்படுகிறது. எந்திரன் 'ரோபோ' ஏற்கனவே தயாராகி விட்ட நிலையில் அதனை மும்பையில் ஒரு பங்களாவுக்குள் ரகசியமாக அடைத்து வைத்திருக்கிறார்கள். 'ரோபோ'வுக்கு 'அவுட்டோர்' சூட்டிங் கிடையாது. இந்த 'ரோபோ' சிறியவர் முதல் பெரியவர் வரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் பலவகை அட்டகாசங்களைச் செய்கிறது. 'ரோபோ' வில்லன் கையில் கிடைக்கும் போது 'இடைவேளை' விடுகிறார்கள். இதன் பின்னர் வில்லன் சொல்படி ஆடும் 'ரோபோ' ஒவ்வொரு காட்சியிலும் ஏகப்பட்ட காமெடி ரகளை பண்ணுகிறது. ரோபோவும், ஐஸ்வர்யாராயும் ஆடிப்பாடும் ஒரு காதல் காட்சி 'கம்யூட்டர் கிராபிக்ஸ்' யுக்தியில் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கப்போகிறது. இந்தப்படத்தில் ஏ,ஆர்.ரகுமான் இதுவரை இல்லாத அளவுக்கு இசையில் 'காமெடி' கலந்து பல புதுமையான டியூன்களை உருவாக்கி உள்ளார். 'எந்திரன்' 2010ம் ஆண்டு ஜனவரி மாத வாக்கில் ரசிகர்களை மகிழ் விக்கும் வண்ணம் உருவாகி வருகிறான்.

“சூப்ப்பர்ர்ர் ஸ்டார் வாழ்க” - ரசிகர்களால் அதிர்ந்த வி.ஐ.டி. வளாகம்!!


வேலூரில் எந்திரன் படப்பிடிப்பு, சூப்பர் ஸ்டார் கலந்துகொண்டு நடித்து வருகிறார் என்று தெரிந்தது தான் தாமதம், சாரை சாரையாக நம் ரசிகர்கள் நாள்தொறும் வி.ஐ.டி. க்கு படையெடுத்து வருகின்றனர். உள்ளே அனுமதிக்கப் படாவிட்டாலும் வெளியே இருந்து படப்பிடிப்பு நடக்கும் அந்த இடத்தை பெருமையுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.
பொதுவாக விடுமுறை காலத்தை விரும்பும் மாணவர்கள், “அடடா இப்போது பார்த்து விடுமுறை சீசனாக போய் விட்டதே” என்று வருத்தப்படுகின்றனர்.
இருப்பினும் உள்ளே செல்ல நம் ரசிகர்களுக்கு தெரியாத டெக்னிக்கா? தங்கள் யூனிவெர்சிட்டி ஐ.டி. கார்டை காண்பித்து, ‘பயோ-டெக் ப்ராஜெக்ட்’ என்று கூறி நம் ரசிக மாணவர்கள் சிலர் உள்ளே புகுந்துவிட்டனர். சிறிது தூரத்திலிருந்து சூப்பர் ஸ்டாரை தரிசித்தவர்கள், தங்கள் அனுபவங்களை அனைவருக்கும் சொல்லி சொல்லி புளங்காகிதமடைகின்றனர்.
கருப்பு டி.ஷர்ட், கருப்பு ஜீன்ஸ், கருப்பு கூலிங் க்ளாஸ்
அன்று அவர்கள் பார்த்தபோது தலைவர் இருந்த தோற்றம்: கருப்பு டி.ஷர்ட், கருப்பு ஜீன்ஸ், கருப்பு கூலிங் க்ளாஸ் (வாவ்!!) - மீசையின்றி!! பார்ப்பதற்கு ‘தில்லுமுல்லு’ அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன் போல அவர் இருந்ததாக கூறப்படுகிறது. புகைப்படம் எடுக்க கடும் கட்டுபாடுகள் இருந்தபடியால் படம் எதுவும் எடுக்க இயலைவில்லை. (தகவல் உதவி: ரோபோ சத்யா)
படப்பிடிப்பில் ரசிகர்களின் கட்டுங்கடங்காத கூட்டத்தை பற்றியும் நேற்று எடுக்கப்பட்ட காட்சிகள் குறித்தும் இன்றைய தினத் தந்தி வேலூர் பதிப்பில் வந்த செய்தி இணைக்கப்பட்டுள்ளது. எவ்வித பாரபட்சமும் இன்றி எந்திரன் செய்தியை தவறாது எங்களுக்கு அளித்து வரும் தந்தி குழுமத்திற்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.
//ரஜினிகாந்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் வி.ஐ.டி. பல்கலைகழகத்தின் வெளியே குவிந்திருந்தனர். ஏராளமான ரசிகர்கள் வெளியே நின்றிருக்கும் தகவலை கேட்ட ரஜினிகாந்த் வெளியே வந்து ரசிகர்களை பார்த்து உற்சாகமாக கையை அசைத்தார். ரஜினிகாந்தை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து சூப்பர் ஸ்டார் வாழ்க என கோஷமிட்டனர்.
ரசிகர்கள் குவிந்ததால் காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பட்டாபி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். நேற்றும் பட யூனிட் குழுவினரை தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.//
முழு செய்திக்கு இணைக்கப்பட்டுள்ள பேப்பர் கட்டிங்கை பார்க்கவும்.

சூப்பர் ஸ்டாரை போட்டி போட்டு படம் பிடித்த 50 க்கும் மேற்பட்ட போட்டோக்ராபர்கள் - Endhiran Update


*TRANSLATION (SUMMARY) AVAILABLE AT THE END OF THE ARTICLE
எந்திரன் ஷூட்டிங் வேலூர் வி.ஐ.டி. பலகலைக்கழகத்தில் ஜரூராக நடைபெற்று வருகிறது.
எடுக்கப்படும் காட்சிகள் குறித்த விபரங்கள அவ்வப்போது பத்திரிக்கைகள் மூலம் கிடைத்துவருகிறது.
சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு காட்சி குறித்து, இன்றைய தினத் தந்தி வேலூர் பதிப்பு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. விஞ்ஞானியாக வரும் சூப்பர் ஸ்டார் எந்திரனை கண்டு பிடித்ததற்காக மீடியாவின் கேமிராமேங்களும் போட்டோக்ராபர்களும் அவரை Flash மழையில் படம் எடுத்து தள்ளுவதாக காட்சி எடுக்கப்பட்டது.
விரிவான செய்திகளுக்கு இணைக்கப்பட்டுள்ள தந்தி கட்டிங்கை காண்க.
நீங்கள் கீழே காணும் செய்தி இன்றைய Indian Express நாளிதழில் வந்தது. ஆனா ஆள் அம்பு சேனை அனைத்தும் இருக்கும் நம்ம சிஃபி கும்பல் இந்த செய்தியை அப்படியே எடுத்து சுட்டு அவர்கள் வெப்சைட்டில் போட்டுவிட்டது.
கடைசியில் நான் ஆங்கிலத்தில் கொடுத்துள்ள Disclaimer ஐ படிக்க தவறாதீர்கள்.
…………………………………………………………………………………………………………………
ஐஸ்வர்யா ராய் - ரஜினி உயர் ரக காரில் ரொமான்ஸ்?
வேலூர் வி.ஐ.டி.யில் படு வேகமாக நடைபெற்று வருகிறது எந்திரன் படப்பிடிப்பு. இன்னும் சில நாட்களில் இந்த ஷெட்யூல் முடிவுற்று, அடுத்து குலு மணாலிக்கு செல்லவிருக்கிறது. அங்கு சில காட்சிகளும் ஒரு டூயட்டும் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
ரஜினி - ஐஸ்வர்யா ராய் இருவரும் சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய காட்சி ஒரு காஸ்ட்லி காரில் படமாக்கப்படலாம் என்று தெரிகிறது. இதற்க்க்காகவே அந்த கார் ரூபாய் 90 லட்சம் செலவழிக்கப்பட்டு வாங்கப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது.
விஞ்ஞானியாகவும் ரோபோவாகவும் சூப்பர் ஸ்டார் இரட்டை வேடத்தில் நடிப்பதால் மிகவும் பிசியான ஒரு ஷெட்யூலில் ரஜினி நடித்து வருகிறார். அதே போல ஐஸ்வர்யா ராயுடன் ரொமான்ஸ் மற்றும் பாடல் காட்சிகளில் நடிக்கவேண்டியிருப்பதால் தனது உடலை பிட்டாகவும் ஸ்லிம்மாகவும் வைத்துக்கொள்ள கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
**கவனிக்க கார் விலையை எக்ஸ்பிரஸ் உறுதியாக கூறவில்லை. சும்மா பரபரப்புக்காக ஒரு பெரிய தொகையை போட்டிருக்கிறார்கள்.
…………………………………………………………………………………………………………………
Sify’s news:
Rajini to romance in a car?
SHOOTING for Rajinikanth’s Endhiran, The Robot, is progressing at a brisk place and it is said that the crew is likely to move to Kulu Manali next for shooting a few scenes and a song for the film.
It is believed that an important scene feautring the two will be shot in a brand new high-end Benz car, purchased at Rs 90 lakh for this.
Meanwhile, the Superstar is also said to be working out with a rigourous schedule, to fit the role of a scientist and a robot (the actor plays two roles in the movie), and to also look slim andfit for his songs with Ash.
*The views expressed in the article are the Indian Express team’s and not of Sify.com. We purely lift from other sources since we don’t have our own.
…………………………………………………………………………………………………………………
English Translation:
Superstar soaked in camera flashes
Endiran shooting is progressing at a brisk pace in V.I.T. now. The details about the scenes which are being shot are appearing in local newspapers frequently.
In Dinathanthi’s Vellore edition they have published an article regarding a scene shot in V.I.T.
Rajini who invented a new ROBOT, has been interviewed by media persons and morethan 50 Photographers surrounding Rajini to catch glimpse of “The great Scientist”, So lightning of flashes continued for a while.
Also Indian Express - today’s edition has published an article regarding Endiran Shooting. But Sify people did a great job by just Cut & Copy (stolen) the same to their website.
Please read the Disclaimer above without fail.
- Translation by Hari Sivaji.

எந்திரனை வரவேற்ற மீஞ்சூர் ரசிகர்கள், எல்லோரையும் வசியம் செய்யும் ரஜினி! Etc,etc.,


1) சூப்பர் ஸ்டாரை வரவேற்ற மீஞ்சூர் ரசிகர்கள்
சென்ற வாரம் எண்ணூரில் எந்திரன் படப்பிடிப்பு நான்கு நாட்கள் நடைபெற்றது நினைவிருக்கலாம். படப்பிடிப்பில் தாமதத்தை தவிர்க்கும் பொருட்டு சூப்பர் ஸ்டார் பைக்கில் சென்ற விஷயத்தை கேள்விப்பட்டோம்.
முதல் நாள் அவர் அங்கு படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஷயத்தை கேள்விப்பட்ட அந்த பகுதி ரசிகர்கள் வல்லூர் கேம்ப் நுழைவாயிலில் அவரை வரவேற்று அட்டகாசமான பேனர் ஒன்றை அடுத்த நாளே வைத்துவிட்டனர்.
தமிழகத்தின் நாளைய தளபதியே வருக… வருக…!!“எந்திரன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வருகை தரும் தமிழகத்தின் நாளைய தளபதியே வருக… வருக…” என்ற வாசகத்துடன் காணப்பட்ட அந்த பேனர் எந்திரன் படப்பிடிப்பு எண்ணூரில் நடக்கும் விஷயத்தை அப்பகுதி மக்களுக்கு தெரியப்படுத்தியது. படப்பிடிப்புக்கு செல்ல மக்கள் ஆயத்தமாகுமுன் அந்த குறிப்பிட்ட ஷெட்யூலே முடிந்து சூப்பர் ஸ்டார் வேலூர் சென்றுவிட்டார். சூப்பர் ஸ்டாரை நேரில் காண ஆவலாயிருந்த வல்லூர் மற்றும் மீஞ்சூர் பகுதி மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
2) எந்திரனுக்கு எதிராக திட்டமிட்டு பரப்படும் வதந்திகள்
மெகா பட்ஜெட் படமாக இருந்தாலும் எந்திரன் படத்துக்காக ஷங்கர் எந்த அளவு Planning செய்கிறார் என்று சென்ற பதிவில் பார்த்தோம் அல்லவா? இப்படி திட்டமிட்டு செயல்படும் ஷங்கர் குறித்து தேவையற்ற வதந்திகளை சிலர் பரப்பி வருகின்றனர்.
ஷங்கர் படப்பிடிப்புக்காக மூன்று உயர் ரக கார்களை கேட்டதாகவும், அதில் ஒன்றை அவர் வேண்டுமென்றே அடித்து நொறுக்கும் காட்சியில் பயன்படுத்தியதாகவும் இது குறித்து ஐங்கரன் சொல்லாததையெல்லாம் தனது புளுகு மூட்டைகளை அவிழ்த்து கூறியிருந்தார் ஒரு ஆங்கில பத்திரிக்கையின் எழுத்தாளர் சில நாட்களுக்கு முன்பு. ஷங்கர் மூன்று கார்களை கேட்டது உண்மை. ஆனால் அது அவர் பயணம் செய்வதற்கு அல்ல. படத்தின் காட்சிகளில் பயன்படுத்த.
இப்போது அதே நாளிதழ் அந்த மூன்று கார்களையுமே (Mercedes Benz, BMW, Audi) ஷங்கர் அடித்து நொறுக்கப்படும் காட்சியில் பயன்படுத்திவிட்டதாக அபாண்டமாக கூறியுள்ளது. பொய் எப்படியெல்லாம் ரெக்கை கட்டி பறக்கிறது பார்த்தீர்களா? இப்படியெல்லாம் செய்திகளை வெளியிடுவதன் மூலம் சன்னை கலவரப்படுத்தும் அவர்கள் நோக்கம் நமக்கு தெரியாமலில்லை. ஆனால் சூப்பர் ஸ்டார் இருக்க பயமேன் என்று ஹாயாக இருக்கிறது ‘சன்’.
3) “நம் எல்லோரையும் வசியம் செய்கிறார் ரஜினி” - ஜாக்கி ஷராப்
அண்டை மாநில மற்றும் பாலிவுட் கலைஞர்கள் நம் சூப்பர் ஸ்டார் மீது வைத்துள்ள மதிப்பும் மரியாதையும் வியக்கத்தக்க ஒன்று என்று நமக்கு தெரியும். நானா படேகர் மற்றும் மணீஷ் மல்ஹோத்ராவையடுத்து நடிகர் ஜாக்கி ஷராப் சூப்பர் ஸ்டார் பற்றி மிகவும் உயர்வாக கூறியிருக்கிறார். பாலிவுட்டின் ஸ்டைலிஷ் நடிகர்களில் இவரும் ஒருவர். ‘Best Dressed Actor’ விருதை கூட இவர் ஒரு முறை பெற்றிருக்கிறார்.
‘ஆரண்யகாண்டம்’ என்ற தமிழ் படத்தில் நடிப்பதற்காக சென்னை வந்துள்ள அவர் இங்கு Deccan Chronicle நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் ஒரு கேள்விக்கு சூப்பர் ஸ்டார் பற்றி அவர் கூறியிருக்கும் பதிலை பாருங்கள்.
உங்கள் குடும்பமே ரஜினி ரசிகர்களாக இருப்பது குறித்து…ஜாக்கி ஷராப் : “நம் எல்லோரையும் ரஜினிகாந்த் வசியம் செய்கிறார் என்பதுதான் உண்மை. நானும் என் மனைவியும் மட்டுமல்ல என் மகன் டைகர் கூட அவரின் தீவிர விசிறி. நாங்கள் அவரது படங்கள் ஒன்றை கூட விடுவதில்லை”
…………………………………………………………………………………………………………………On his entire family being a Rajinikanth fan…Rajinikanth really mesmerises all of us. Not only my wife and I but my son Tiger is also a great fan of Rajinikanth. We never miss out his films. (Deccan Chronicle 27/12/08)…………………………………………………………………………………………………………………
ரஜினியின் சம கால நடிகர் இவர். ஈகோ எதையும் பார்க்காமல் என் குடும்பமே ரஜினி தீவிர ரசிகர்கள் என்று கூறும் ஜாக்கி ஷராப்பின் பெருந்தன்மையை பாராட்டுவோம். நன்றி ஜாக்கி. தங்கள் ஆரண்யகாண்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
4) இதை படித்துவிட்டு சிரிக்காமல் இருப்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு…!!!
அடுக்கு மொழி மன்னன் விஜய டி.ஆர். இந்த வாரம் வெளியாகியிருக்கும் ஆ.வி. இதழில் சீரியஸ் பேட்டி ஒன்று அளித்துள்ளார். என் நண்பர் படித்து காண்பித்தவுடன் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. எனவே உங்கள் பார்வைக்கும் அந்த பேட்டியில் ஒரு பகுதியை வைக்கிறேன்.
“பெரிய பெரிய நடிகர்களுக்கெல்லாம் சிம்பு மீது பொறாமை”“சிம்புவை சுற்றி ஏன் இத்தனை சர்ச்சைகள் என்று கேட்க்கிறார்கள். காய்ச்ச மரம் கல்லடி படத்தானே செய்யும். “இந்தப் பைய்யன் இப்படி வளர்றானேன்னு சிம்பு மேல பெரிய பெரிய நடிகர்களுக்கெல்லாம் ஆதங்கம் இருக்கு. என் மகனைப் போல நல்லவனை இதுவரைக்கும் நான் பார்க்கலை. எவ்வளவோ பெண்கள் கூட பழகறதுக்கு வைப்பு கிடைச்சபோதும் காதல் குறித்து மென்மையான ஒரு இதயத்தோட இருக்கான் சார். சினிமாவுல இருந்துட்டு என்னை மாதிரியே நல்லவனா இருக்குறது பெரிய விஷயம். என் மகனை நினைச்சி நான் பெருமைபடுறேன்.”
என் மகன் அடுத்த சூப்பர் ஸ்டாரா வர்றதுக்கு வாய்ப்பிருக்குதான்னு தானே கேக்குறீங்க? சினிமாவுல ஜெயிக்கிறதுக்கு புத்திசாலித்தனம், திறமை இருந்தா மட்டும் பத்தாது. பொறுமையும் அதிர்ஷ்டமும் கூட இருக்கணும். இவ்வளவு நடிகர்கள் இருக்கிற தமிழ் சினிமாவுல ரஜினி-கமல், விஜய்-அஜீத், தனுஷ்-சிம்பு ஆகிய ஆறு பேருக்கு மட்டும்தான் மக்கள் இடம் கொடுத்திருக்காங்க. அதுல ஒருத்தனா வந்து நிக்கிறான் யாரு? அவனைப் பெத்து இந்த விஜய டி.யாரு. “ஐ ஆம் எ லிட்டில் ஸ்டார். ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்” என்று 1989 லேயே நான் அவனுக்கு பாட்டெழுதிட்டேன் சார். எதிர்காலத்துல அவன் எப்படி வளர்ந்து வர்றான்னு பாருங்க சார். நான் தலைக்கனதொட சொல்லலை. தன்னம்பிக்கையோட சொல்றேன்.”
என் அடுத்த படத்துல நான் ஒரு முரட்டுத்தனமான வாலிபனா வர்றேன் …“என்னோட அடுத்த படத்தை இப்போ உள்ள யூத்துகளுக்காக எடுத்துகிட்டிருக்கேன். இதுல நான் ஒரு முரட்டுத்தனமான வாலிபனா வர்றேன். அதுக்காக உடம்பை குறைக்க ஜிம் பொய் வெயிட்டை குறைச்சிக்கிட்ட்ருக்கேன். (வயிற்றில் வேகமாக அடிக்கிறாராம்) பாருங்க தொப்பைஎல்லாம் இல்லாம யூத் மாதிரியே இருக்கேனில்லை? இப்போ இருக்கிற ஹீரோக்களை என்னை மாதிரி ஆடி பாட சொல்லுங்க பார்க்கலாம்…”
ரஜினி, கமல் இவங்கல்லாம் ஹீரோவா நடிக்கும்போது நான் நடிக்கக்கூடாதா?“வீராசாமியில நான் ஆடினா தியேட்டர்லே கைதட்டி ரசிக்கிறாங்க சார். உங்களை மாதிரி சிலர் தான் “ஏன் ஹீரோவா நடிக்கிரீங்கன்னு?” கேட்க்குறீங்க. ரஜினி கமலை விட நான் வயசுல சின்னவன் சார். அவங்க நடிக்கும்போது நான் நடிக்கக் கூடாதா? ஒரு காலை தூக்கி இப்படி அடிச்சேன்னா (பக்கவாட்டில் உதைக்கிறாராம்) நாள் முழுக்க அடிச்சிக்கிட்டே இருப்பேன்… நீங்க வேண்ணா கிண்டலுக்கு டி.ஆர். சிக்ஸ் பேக் வைக்கப்போரான்னு எழுதலாம். நான் முகத்தை காட்டி ஜெயிக்கிறவன் இல்லை. அகத்தை காட்டி ஜெயிக்கிறவன்.”
ஆனந்த விகடனில் வரும் ஜோக்குகள் இப்போதெல்லாம் சிரிப்பை வரவழைப்பதில்லை என்று வாசகர்கள் குறைபட்டுக்கொள்வதால் இப்படி ஒரு முயற்சியில் விகடன் இறங்கியிருப்பதாக தகவல்.
இன்னொரு காமெடியும் இருக்கிறது. சமீபத்தில் இவரது மகன் நடித்து வெளிவந்துள்ள படத்தை குடும்பத்தினருடன் நிச்சயம் பார்க்கமுடியாது. இந்த லட்சணத்தில் படம் வெளியான் அடுத்த நாளே, சிஃபி கும்பல் அந்த படம் பெரிய வெற்றி என்று தீர்ப்பு கூறிவிட்டது. மேலும் அந்த வெப்சைட்டில் அந்த நடிகர் அளித்த பேட்டியில், “தம்பட்டம் படம் மிகப் பெரிய வெற்றி. என்னை மாஸ் ஹீரோவாக மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனர். வசூல் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது” என்று பேட்டியளித்திருந்தார். பேட்டியை படித்தவர்களுக்கு “கேள்வியும் நாங்களே, பதிலும் நாங்களே” என்று சிஃபி செயல்பட்டிருப்பது நன்கு புரிந்திருக்கும். (எப்படியிருந்த சிஃபி இப்படியாகிவிட்டது!!).
முதல் காமெடியைவிட இது பெரியதாக இல்லை?
Those who want Bonus Comedy pls watch this video. Pls pls watch this video. Monday madness will go. You will be releived from stress and a non-stop laughter guaranteed.

http://in.youtube.com/watch?v=583A2jqmnIw

சூப்பர் ஸ்டாருக்கு லிப்ட் கொடுத்த அந்த போக்குவரத்து காவலர் என்ன கூறுகிறார்?


TRANSLATION AVAILABLE AT THE END OF THE ARTICLE
சென்ற வாரம் எண்ணூர் படப்பிடிப்புக்கு சூப்பர் ஸ்டார் சென்றுகொண்டிருந்தபோது போக்குவரத்து நெரிசலில் சிக்கிகொண்டதும் பின்னர் அந்த வழியாக சென்ற போக்குவரத் காவலரின் உதவியோடு அவர் செட்டுக்கு நேரத்துக்கு சென்றதும் தெரிந்ததே.
பார் போற்றும் சூப்பர் ஸ்டாரை பைக்கில் அழைத்து சென்ற அந்த காவலர் இது குறித்து என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ள ஆவலாயிருப்பதாக நம் நண்பர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இதோ அந்த அதிர்ஷ்டசாலி காவலரின் அனுபவம்.
இன்றைய தினமணியில் வெளியாகியுள்ளது இது. இந்த கட்டுரைக்கு தினமணி கொடுத்திருக்கும் முடிவுரையை பாருங்கள்…. (கடைசியில் தனியாக கொடுத்திருக்கிறேன்).
ஒருவேளை இதை தினகரன் வெளியிட்டிருந்தால் இந்த சம்பவத்தை வைத்து விளம்பரம் தேடுகிறார்கள் என்று கூறுவார்கள். இப்போது அப்படி கூறமுடியாதல்லவா? செய்தியை வெளியிட்டிருப்பது வேறொரு நாளிதழ். சூப்பர் ஸ்டாரின் நல்ல மனசுக்கு எல்லாம் தானாக நடக்கும்.
சூப்பர் ஸ்டாரை பொறுத்தவரை இதுபோன்ற தனது வியக்கத்தக்க செயல்களை அவர் வெளியில் கூறுவதில்லை. வேறு யாராவது தான் கூறுவார்கள். இந்த விஷயத்திலும் அப்படி தான் நடந்தது. மேலும், அந்த காவலர் மிகவும் தயக்கத்துக்கு பிறகு தான் கட்டுரையாளரிடமே பேசியிருக்கிறார். காரணம் அச்சத்தினால் அல்ல. இந்த சம்பவத்தை அனைவரிடமும் கூறி அவர் ஏதோ விளம்பரம் தேடுவதாக சூப்பர் ஸ்டார் நினைத்துவிடக்கூடாதே என்ற எண்ணம் தான்.
செட்டுக்கு அவர்களை (இன்னொரு காவலரும் உடன் வந்தார்) அழைத்து சென்று உபசரித்து, பின்னர் தனது ஃபோட்டோக்ராபரை அழைத்து, “இவர்கள் என்னுடன் புகைப்படம் எடுக்க நினைக்கவில்லை. நான் தான் இவர்களுடன் எடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்” என்று கூறினாராம். என்ன ஒரு பணிவு!!
தினமணி கூறுகிறது:
நேற்று வந்த ‘அக்கடா துக்கடா’ நடிகர், நடிகைகள் கூட இந்த காரில் தான் வருவேன், ஃப்ளைட்டில் பிஸ்னஸ் க்ளாசில்தான் பயணம் செய்வேன்; கேரவன் இருந்தால் தான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு உள்ளேயே வருவேன் என்றெல்லாம் அடம்பிடித்து தயாரிப்பாளர்களை வாட்டி எடுத்து வரும் இந்த காலகட்டத்தில், தன்னால் படப்பிடிப்பு பாதிக்கப்படக்கூடாது எனபதற்காக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு குறித்த நேரத்தில் செல்ல ஒருவருடைய பைக்கில் செல்லக்கொடிய ரஜினியின் இந்த மனோபாவம் போற்றுதலுக்குரியது.

A lift to Superstar in bike - The police cop narrates!!
Rajini was rushing for Endhiran shooting to Minjur last week. Every day the shooting starts at 8 PM and ends next day early morning. Rajini was commuting to Minjur everyday from his home in Boes garden. Last week he was stuck in the traffic jam near Manali due to Container lorry strike and jam stretched for 5 to 6 Kms. Rajini was sitting patiently in his Qualis car.
As everyone knows Rajini is very punctual for the shooting. He started early but stuck in the traffic jam and the Endhiran crew was getting worried. They came to know about the traffic jam.SS asked his driver to get the traffic police officer standing there. The driver told the cop that “ A VIP in the car wants to see you”. The cop was shocked to see SS. Immediately SS asked him “ I have a shooting at Minjur, can you please give me a lift?”. Shocked and pleasantly surprised the cop replied “Sir why not..how can I say no to you!!”. He left the car and came back in a few minutes with a new helmet and Raincoat and asked SS to wear this.
For 50 minutes the cop drove the bike safely and reached the shooting spot. We after lot of difficulties talked to the cop. He refused initially and reluctantly agreed to talk without revealing his name or photo.“I was shocked to see Rajini in the car. Sir is that you?. He talked to me about the urgency of the shooting”. I gave him the helmet and Rain coat to mask his identity. Another cop followed me. I already know that Rajini goes night rounds in Bike. But this is the first time he is going in someone’s bike after long time.
Ok. How was the conversation in the Bike?He called my name and confirmed it’s my name. Asked me about his family; He asked me “Do you know why I’m rushing to the shooting?. If I don’t go know that will be too much loss for the producer. Do you know how many people are waiting for me? It’s such a big unit.” I understood he didn’t want cause difficulty to anyone.
How about the drive itself?Since it’s a two wheeler I was able to do zig zag and go through the jam. In some places we asked people to give way and Rajini also did the same. At one time when I was going fast he had some difficulties keeping his leg up since the foot rest was not good. He held on to my shoulders tightly. Then I realized the foot rest was not ok. I asked him if he wants to change to the other Bike and he said no problem, let’s continue.
Anything Interesting?SS said even if we go in flight we can’t go in time. Bike is the most convenient. This Bike journey is unforgettable in my life. It has been ages since I rode in a bike and enjoying the ride with friends. Even in the movies the last one was in Uzhipalli when I sat behind the priest, that too only for the shooting.
Umm..then?When we reached the shooting spot, everyone including director Shankar thanked me. SS took us to the Caravan and asked his if we would like to have coffee,Tiffin?. He kept talking to us when the make up session was going on. Then we came out. We couldn’t believe it. We told him good bye and about to leave. Rajini looked around and everyone rushed towards him. He asked the still photographer to take some photos. He said “They are not taking photos with me, But I’m taking photos with them”. We cannot forget the 13 KM, 50 minutes ride in our life.
- Translation by Kannan

கிராபிக்ஸ் (CG) மூலம் காட்சிகள் வடிவமைக்கப்பட்ட பிறகே படப்பிடிப்பு நடத்தப்படுகிறது - எந்திரன் ஆச்சரியங்கள்!!


சூப்பர் ஸ்டாரின் சிவாஜி திரைப்படம், விற்பனை முதல் வசூல் வரை பல சாதனைகளை படைத்தது. அதுமட்டுமின்றி டெக்னிக்கலாக பல விஷயங்கள் சிவாஜி படத்தில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
அதுபோல் தற்போது தயாரிப்பிலிருக்கும் எந்திரன் படம் சிவாஜியை விட பல மடங்கு ஆச்சரியங்களை உள்ளடக்கி இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ரத்னவேலு இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் எந்திரன் குறித்து கூறியிருப்பதை மட்டும் கீழே தருகிறேன். நேரத்தை சேமிக்கும் பொருட்டு படத்திற்கான Computer Graphics CG பணி உடனுக்குடன் சுடச் சுட தயாராகி வருகிறது என்று நாம் முன்பே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்து உங்களுக்கு நினைவிருக்கலாம்.
எந்திரனில் கடைப்பிடிக்கப்படும் புதிய வழிமுறைகள்
“எந்திரன் ஷங்கர் சாரின் லட்சியப் படம். நான் இதற்க்கு முன்பு ஒளிப்பதிவு செய்த சேது, வாரணம் ஆயிரம் போன்று உணர்வுப்பூர்வமாக இல்லாமல் எந்திரன் மிகவும் ஸ்டைலிஷாக இருக்கும். இது என் தனிச் சிறப்பு வாய்ந்தது என்று கூற பல காரணங்கள் இருக்கின்றன. பொதுவாக படப்பிடிப்பு முழுதும் முடிந்தவுடன் Computer Graphics CG பணி மேற்க்கொள்ளப்படும். ஆனால் என்திரனில் அது உடனக்குடன் செய்யப்படுகிறது. நாங்கள் ஏற்கனவே பல ‘Pre-production’ பணிகள் செய்துவிட்டோம். சொல்லப்போனால் படப்பிடிப்பை விட இதற்க்கு தான் அதிக சிரத்தை எடுத்துக்கொண்டோம். இதன் மூல பணத்தையும் நரத்தையும் நன்கு மிச்சப்படுத்தலாம். நாங்கள் இதுவரை ஒன்றிரண்டு பாடல்கள் மற்றும் சில காட்சிகளை தான் எடுத்திருக்கிறோம். தமிழ் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக ஒரு காட்சி எப்படி இருக்கவேண்டு என்று Computer Graphics மூலம் தீர்மானிக்கப்பட்ட பிறகே அது படம் பிடிக்கப்படுகிறது. CG யை பார்த்த பிறகு நிபுணர்கள் அந்த காட்சியை படம்பிடிக்க தேவையான வழிமுறைகள் மற்றும் அதற்க்கு தேவையான பட்ஜெட் குறித்து தங்கள் ஆலோசனைகளை வழங்குகிறார்கள். எந்திரனை பொறுத்த வரை என் திறமையை காட்ட ஷங்கர் எனக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார். எதையும் திட்டமிட்டே அவர் செய்கிறார். (Courtesy: Times of India)
…………………………………………………………………………………………………………………
உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம்…
அதெப்படி CG மூலம் எடுக்க வேண்டிய காட்சிகளை தீர்மானிக்கிறார்கள்?
பொதுவாக அனிமேஷன் செய்பவர்கள் தாங்கள் எடுக்கவேண்டிய காட்சி குறித்து முதலில் Story Board வரைவார்கள். அதை அடிப்படையாக வைத்து அனிமேட் செய்வார்கள். நேரத்தை, மனித சக்தியை இதன் மூலம் பெருமளவு மிச்சப்படுத்தலாம். இதை தான் ரத்னவேலு கூறியிருக்கிறார்.காஸ்ட் கண்ட்ரோலுக்கு (Cost Control) இது நிச்சயம் தேவை. அதுமட்டுமின்றி நாம் மனதில் நினைப்பதை கொண்டுவர இந்த Story Board மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை அனிமேஷனுக்கு மட்டும் தான் பயன்படுத்தவேண்டும் என்பதில்லை. இது போன்ற Pre-production பணிகளுக்கும் பயன்படுத்தலாம். இதன் மூலம் எடுக்க வேண்டிய காட்சி என்னவென்று ஒரு ஐடியா முன்கூட்டியே கிடைத்துவிடுகிறது. ஆகையால் படச் சுருள் பயன்பாடு (Film Roll usage), படப்பிடிப்பு நேரம், ஷூட்டிங் செலவு என அனைத்தையும் கட்டுக்குள் கொண்டுவரலாம்.

எந்திரன்: வேலூர் டு குல்லு-மனாலி!!


எந்திரன் படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு குளுகுளு குலு-மனாலியில் விரைவில் துவங்குகிறது. வேலூர் பொறியியல் பல்கலைக் கழகம் விஐடியில் நாளையுடன் முடிகிறது.(விஞ்ஞானி) ரஜினி-ஐஸ்வர்யாராய் தொடர்பான காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டன. இன்னும் சில காதல் மற்றும் டூயட் காட்சிகளை குளு குளு பகுதிகளில் எடுக்கத் திட்டமிட்டிருந்த ஷங்கர் அதற்காக இன்னும் சில தினங்களில், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள குலு மனாலிக்குச் செல்கிறார், தனது யூனிட்டுடன்.முதலில் டாப் ஸ்லிப் மற்றும் வால்பாறைப் பகுதிகளில் படமாக்கத் திட்டமிட்டிருந்த சில காட்சிகளை இப்போது குலு மனாலியில் படமாக்கப் போகிறார்கள்.
மெர்சிடிஸ் கார்...!:இந்தக் காதல் காட்சிகளில் ஒரு மெர்சிடிஸ் கார் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் காரின் விலை ரூ. 1 கோடி என்று சிலரும், ரூ. 2 கோடி என்று சிலரும் கோலிவுட்டில் கூறி வருகிறார்கள்.இந்த பென்ஸ் காருக்கு படத்தில் மிக முக்கியமான பங்குண்டாம்.இப்படி வாங்கப்பட்ட காரில் ஒன்றை ஒரு காட்சிக்காக ஏற்கெனவே ஷங்கர் எரித்து விட்டதாகவும் கூறுகிறார்கள். ஆனால் எந்திரன் யூனிட்டிலோ இதெல்லாம் கட்டுக்கதை என்கிறார்கள். ரஜினி சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் அவரே சொன்னால்தான் உண்மை என்னவென்று புரியும்.

Rajnikanth and Aishwarya romancing in a car


Director Shankar’s ‘Endhiran’ has completed being shot at ‘VIT College’ in Vellore. Sooner, the shooting would be fleeting to exotic locales of Kulu Manali. Sources have revealed that series of romantic songs would be shot there in an expensive Benz Car that costs Rs. 1Crores. Earlier, a same sort of BMW car was blasted and that was the rigid reason of Ayngaran stepping out of productions.
The romancing sequences will be gaining more importance in the film as in previous films of Shankar. To fir his looks younger and suitable to that off Aishwarya Rai, Superstar Rajnikanth has been working on fitness process in gaining that young fresh look.

Rajnikanth and Ash in Vellore on Christmas


Well, it wasn’t a day of celebrating Christmas for the entire team of ‘Endhiran’ as they were shooting busily. Rajnikanth, Aishwarya Rai and rest of casts were present there for the shooting at VIT College, Vellore…. Since, it was a Government Holiday the college wasn’t working. But sooner, it turned to be a great spot with around 10,000 people leaping in crowds to watch their dream stars Rajnikanth and Aishwarya Rai Bachchan.
Both Rajnikanth and Aishwarya Rai were made to stay at luxurious guest homes inside the campus itself. With Sun Pictures taking over the production works, shooting is extending on extreme pace and film release in December 2009.

“ரஜினி படங்களை ரிலீஸ் தேதியன்றே பார்க்க தியேட்டருக்கு ஓடியிருக்கிறேன்!” - கலாநிதி மாறன


சில விஷயங்கள் ஏன் நடக்கிறது, எதற்கு நடக்கிறது என்ற கேள்விக்கான விடை அந்த ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும். எந்திரனின் தயாரிப்பாளராக திடீரென சன் டி.வி. வந்திருப்பதும் அப்படி தான்.
சில ஆண்டுகளுக்கு முன்பு…
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விகடனின் இலவச இணைப்பு ஒன்றில் கலாநிதி மாறனின் பேட்டி மற்றும் அவரது எதிர்க்கால் லட்சியங்கள் குறித்து செய்திகள் இடம்பெற்றிருந்தன. சன் நெட்வொர்க் தோன்றியது எப்படி, உடனிருக்கும் தளபதிகள் யார் யார் இதைபற்றியெல்லாம் அந்த இதழில் கலாநிதி மாறன் சுவையாக கூறியிருந்தார்.
வீட்டில் எதையோ நான் தேடிக்கொண்டிருக்கையில் கிடைத்தது இது. சுவாரஸ்யமாக இருந்ததால் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.
அந்த சிறப்பிதழில் தனது ரோல் மாடல்களாக பத்து பேரை பட்டியலிட்டிருந்தார் கலாநிதி. அதில் சூப்பர் ஸ்டாரும் ஒருவர்.
அந்த பட்டியல்லுக்கு அவர் அளித்த முன்னுரை என்ன தெரியுமா?
“நாம் சந்திக்கிற ஒவ்வொரு மனிதரும் நமக்கு ஒரு குருவே. அவரிடமிருந்து ஏதாவது ஒன்றை நாம் கற்றுக்கொள்ளலாம் என்று நினைப்பவன் நான். எனக்கு அப்படி வாழ்க்கையை கற்றுத்தந்த ரோல் மாடல்கள் உலகம் முழுக்க உண்டு. எனது டாப் 10 ரோல் மாடல்கள் பற்றி இங்கே சொல்கிறேன்”.
சூப்பர் ஸ்டாரை பற்றி அவர் கூறியிருந்தது இங்கு இணைக்கப்பட்டிருக்கிறது.
ரஜினி… இவரது ரசிகன் நான்! என் பள்ளிப்பருவத்தில் அவரது படங்கள் பார்க்க, ரிலீஸ் தேதியிலேயே தியேட்டருக்கு ஓடிய நினைவுகள் என் நெஞ்சில் நிழலாடுகின்றன. அத்தனை அழகில்லை. அத்தனை நிறமுமில்லை. ஆனாலும், இன்றும் தமிழக அகராதியில் ஸ்டைல் என்றால் அது ரஜினி!
பஸ் கண்டக்டர் சிவாஜி ராவ், மாநிலம் போற்றும் சூப்பர் ஸ்டாரான கதை, ஒவ்வொரு மனிதனுக்கும் தருகிற தன்னம்பிக்கை இருக்கிறதே… அது தான் ரஜின்யின் மிகப் பெரிய ஸ்டைல்!
மூன்று நான்கு ஆண்டுகள் ஆகியிருந்தாலும் அந்த பழைய விகடனை புரட்டியபோது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் இன்று? ஹூம்…. எப்படியிருந்த விகடன் இன்று இப்படி ஆகிவிட்டதே!! பெருமூச்சு தான் வருகிறது.

ரஜினி அமிதாப் வழியில் செல்லவேண்டுமா? & கரும்பு கசந்தால் யார் குற்றம்? etc.


கடந்த இரண்டு நாட்களாக நான் தயார் செய்து கொண்டிருந்த இந்த தொகுப்பு, மதியமே தயாராகிவிட்டது. புகைப்படங்களை தயார் செய்ய எனக்கு நேரம் தேவைப்பட்டதால் இரவு போஸ்ட் செய்துகொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். அதற்குள் நான் தயார் செய்து வைத்திருந்த ஒரு செய்திக்கு வேலையே இல்லாமல் போய்விட்டது. ரசிகர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக சிஃபி அந்த செய்தியையே நீக்கியிருப்பதாக Envazhi.com மூலமாக அறிந்தேன். இருப்பினும் நான் தயார் செய்து வைத்திருந்த செய்தியை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இந்த தொகுப்பில் இரண்டாவதாக நான் அளித்திருக்கும் செய்திதான் அது. அவர்களின் சர்ச்சைக்குரிய டாப் 5 வரிசை பற்றி நான் எதுவும் கூறவில்லை. (காரணம் அதை முதலில் படித்தவுடன் எனக்கு சிரிப்பு தான் வந்தது!) ஹொகேனக்கல் பிரச்னையில் சூப்பர் ஸ்டார் வருத்தம் தெரிவித்ததை மன்னிப்பு கேட்டதாக திரும்ப திரும்ப உள் நோக்கத்துடன் கூறி வருவதைத்தான் நான் கண்டித்திருக்கிறேன்.
-
…………………………………………………………………………………………………………………
1) ரஜினி அமிதாப் வழி செல்லவேண்டுமா?
ஒருவரை கொல்வதானால் விஷம் வைத்தும் கொல்லலாம். சர்க்கரை கொடுத்தும் கொல்லலாம். ரஜினி விஷயத்தில் சிலர் எழுதுவதும் இப்படியே.
சமீபத்தில் ஒரு வலைத்தளத்தில் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார்கள். கட்டுரை முழுதும் சூப்பரோ சூப்பர். ஆனால் முடிவில் அவர்கள் கூறியது இருக்கிறதே, அது தான் சொதப்பலோ சொதப்பல்.
பொதுவாக இது போன்ற உளவியல் ரீதியாக எழுதப்படும் கட்டுரைகளை படிக்கும்போது நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ரஜினியை ஆகோ ஓஹோவென்று அவர்கள் கட்டுரை முழுதும் புகழ்ந்துவிட்டு இறுதியில் அவருக்கு ஒரு வஞ்சக வலை விரித்திருப்பார்கள். இவர்கள் வலையில் ரஜினி விழவாப் போகிறார்? எதற்கு அலட்டிக்கொள்வானேன் என்று தானே கேட்கிறீர்கள். அவர் விழுந்தால் என்ன அவர் ரசிகர்கள் விழுந்தால் என்ன… எல்லாம் ஒன்று தானே?
அப்படி என்ன தான் எழுதியிருந்தார்கள் முடிவில்? அமிதாப்பை போல ரஜினி வரவேண்டுமாம். அவரைப் போல் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கவேண்டுமாம்…. இது எப்படி இருக்கு?
ரஜினி, அமிதாப்பின் பாதையில் ஏன் போகவேண்டும்?
அமிதாப் ஒரு சிறந்த மனிதர் மற்றும் நடிகர் என்பதில் எனக்கு எந்த மாற்றுகருத்தும் இல்லை. ஆனால், தமது 59 வது வயதிலும் இளம் ஹீரோயின்களோடு டூயட் பாடும் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினி, அமிதாப்பின் பாதையில் ஏன் போகவேண்டும்?
அதற்க்கு அவர் பேசாமால் ஒய்வு பெற்றுவிடலாம். சிவாஜி, அமிதாப் ஆகியோர் செய்தவற்றை ரஜினி நிச்சயம் செய்யக்கூடாது. ரஜினி என்றுமே எம்.ஜி.யார் வழியில் தான் செல்லவேண்டும். கடைசிவரை ஒரு சூப்பர் ஹீரோவாகவே எம்.ஜி.ஆர். நடித்தார். தனது கடைசிப் படத்தில் கூட எம்.ஜி.ஆர். கதாநாயகனாகத்தான் நடித்தார். எனவே சூப்பர் ஸ்டாரும் கடைசிவரை ஹீரோவாகத் தான் நடிக்கவேண்டும். எதிர்காலத்தில் நடித்தது போதும் என்று அவர் நினைத்தால் ஒன்று அரசியலுக்கு வரவேண்டும் அல்லது ஒய்வு பெற்றுவிடவேண்டும். இது தான் நம் விருப்பம்.
ரஜினியை பிடிக்காத சக்திகள் கையிலெடுக்கும் ஆயுதம்
ரஜினியை பிடிக்காத சக்திகள் கையிலெடுக்கும் ஆயுதம் தான் இந்த “அமிதாப் வழி போங்க” என்பது. இந்தியா டுடே ரஜினியை மட்டம் தட்டுவதர்கேன்றே சென்ற ஆண்டு ஒரு சிறப்பிதழ் வெளியிட்டதே ஞாபகமிருக்கிறதா? அதில் அந்த இதழின் சிறப்பாசிரியர் கூட கூறியிருந்தது இது தான். “குழப்பங்களை தவிர்த்து ரஜினி அமிதாப் வழி சென்றால் அவரது எல்லைகள் விரிவடையும்!”
பரம வைரிகள் முதல் நேற்று முளைத்த காளான்கள் வரை ரஜினியின் எதிர்ப்பாளர்கள் அனைவரும் கூறும் ஒரு ஆலோசனையாக்கும் இது. என்ன ஒரு நயவஞ்சக ஆலோசனை…! ஆனால் தலைவர் மிகவும் புத்திசாலி. அவருக்கு தெரியும் எந்த பாதையில் போகவேண்டும், எதில் போனால் மதிப்பு நிலைத்திருக்கும் என்று…!!
2) சிஃபி தூவியுள்ள விஷ விதை! யார் பலனடைய தூவப்பட்டது?
சிஃபி கும்பல் மற்றொரு வக்கிரத்தை அரங்கேற்றியுள்ளது. 2008 ன் டாப் 5 நடிகர்கள் என்ற பெயரில்.
அவர்கள் பட்டியலை முதலில் பார்த்துவிடுவோம். 5) அஜீத் 4) சூர்யா 3) விஜய் 2) ரஜினி 1) கமல்.
இந்த பட்டியலில் உள்ள வரிசை பற்றி நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. அவர்களே கூறியது போல 2008 இல் அந்தந்த நடிகர்களின் படங்கள் பெற்ற வெற்றியை வைத்து இந்த வரிசையை அவர்கள் தயாரித்துள்ளார்களாம். ஓ.கே. மன்னிப்போமாக.
இதில் ரஜினியை பற்றிய செய்தியில் மட்டும் தங்கள் வழக்கமான வக்கிரத்தை அரங்கேற்றியுள்ளது வக்கிர சிஃபி கும்பல். குசேலன் குறித்து அவர்கள் கூறியதை கூட நாம் பொருட்படுத்தவில்லை. ஆனால் அவர்கள் அதற்க்கு பிறகு அவர்கள் தூவியுள்ள விஷ விதை இருக்கிறதே…. அப்பப்பா…. யார் பலனடைய தூவப்பட்டதோ?
முன்னை காட்டிலும் உயர்ந்த ரஜினியின் செல்வாக்கு
ஹொகேனக்கல் விஷயத்தில் ரஜினி கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டதால் அவரது செல்வாக்கு பெருமளவு சரிந்ததாம். தற்போது எந்திரனை சன் பிக்சர்ஸ் வாங்கியதை அடுத்த அவரது செல்வாக்கு மீண்டு திரும்பிவிட்டதாம். இது எப்படி இருக்கு? இதை எழுதிய அரை வேக்காடு யாரு என்று தெரியவில்லை.
தான் வருத்தம் தான் கேட்டதாகவும், மன்னிப்பு கேட்க்கவில்லைஎன்றும், அதை கூட தான் கேட்டதற்கான சூழ்நிலையை சூப்பர் ஸ்டார் தமது ரசிகர் சந்திப்பில் தெளிவாக விளக்கிவிட்டபிறகும் கூட இப்படி “மன்னிப்பு கேட்டார், மன்னிப்பு கேட்டார்” என்று எழுதும் இவர்களை எல்லாம் நிற்க வைத்து…..
என்னைப் பொறுத்தவரை வருத்தப் பிரச்னையில் அவரது செல்வாக்கு பாதிக்கப்பட்டது உண்மை தான் என்றாலும், தமது ரசிகர் சந்திப்பில் நடந்து என்ன என்று அவர் விளக்கிக் கூறிய பின் அவர் மீதுள்ள கறை அகன்று முன்னை காட்டிலும் அவரது செல்வாக்கு உயர்ந்துவிட்டது. உண்மை இப்படியிருக்க எந்திரனை சன் வாங்கியதால் வருத்தப்ரச்னையில் சரிந்துவிட்ட அவரது செல்வாக்கு மீண்டும் உயர்ந்துவிட்டதாம். அடப்பாவிகளா….
இப்படி எழுதுவது ஒரு வகை “Perverted Journalism” ஆகும். அதாவது “வக்கிர இதழியல்”. சிஃபி என்றாலே அவர்கள் ரஜினி எதிர்ப்பு சக்திகள், அது ஒரு ரஜினி எதிர்ப்பு வெப்சைட் என்ற அடையாளத்தை நாம் ஏற்படுத்திவிட்டால் போதும். இவர்கள் தாமாக வழிக்கு வருவார்கள்.
இதற்க்கெல்லாம் மூல காரணம் தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவில் தமது வக்கிரத்தை காண்பித்துவரும் அந்த எழுத்தாளர் தான்.
நான் மறுபடியும் மறுபடியும் கூறுகிறேன். சிஃபி, கப்சாவூட்ஸ் போன்ற தளங்களை முற்றிலுமாக புறக்கணியுங்கள். நமது சக்தியை நிரூபியுங்கள். விகடனில் இன்னும் சிலர் தங்கள் சந்தாவை சாக்கு போக்கு சொல்லி தொடர்வது வேதனைக்குரியது. வருத்ததிற்குரியது.
3) விஜயலக்ஷ்மி சுல்தானுக்கு வந்தது எப்படி?
தற்போது சுல்தான் படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடி விஜயலக்ஷ்மி. பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள் இவர். விஜய் டி.வி.யில் தொகுப்பாளராக அறிமுகமான இவர் பின்னர் நடித்த ‘சென்னை 600028′ மற்றும் ‘அஞ்சாதே’ சூப்பர் ஹிட்டாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
விஜயலக்ஷ்மியின் பாத்திரத்துக்கு முதலில் பேசப்பட்டவர் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக திகழும் இலியானா தான். ஆனால், பிசியான முன்னணி நடிகையாக இருக்கும் தனக்கு சௌந்தர்யா ரஜினி விதித்த நிபந்தனைகள் (சம்பளம் மற்றும் எப்போது கூப்பிட்டாலும் வரவேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள்) ஒத்துவராது என்பதால் அவர் படத்திலிருந்து விலகிக்கொண்டார். அதையடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டவர் தான் விஜயலக்ஷ்மி.
எத்தனையோ பேர் இருக்க இவ்விருவரை ஏன் சௌந்தர்யா அணுகினார்? அதற்க்கு காரணம் இருக்கிறது. அனிமேஷன் கேரக்டராக வரும் சூப்பர் ஸ்டாரின் தோற்றத்திற்கு ஜோடியாக இவ்விருவரும் மிகவும் பொருத்தமாக இருப்பார்கள் என்பதால் தான். இவ்விருவரின் உடற்கட்டும், முகமும், கூந்தலும் அனிமேஷன் செய்வதற்கு எளியது. சூப்பர் ஸ்டாரின் கேரக்டரின் உருவ அமைப்புக்கு பொருத்தமாகவும் இருப்பார்கள். இதில் இரண்டாவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள விஜயலக்ஷ்மி நூறு சதவீதம் பொருத்தமான ஜோடி என்றால் மிகையாகாது.
சூப்பர் ஸ்டாரின் தயக்கம்
தனது ஜோடியாக விஜயலக்ஷ்மியை ஏற்க சூப்பர் ஸ்டார் முதலில் தயங்கினார். இருப்பினும் சௌந்தர்யா அனிமேஷன் கேரக்டரின் தன்மையை எடுத்துக் கூறி தனது தந்தையை கன்வின்ஸ் செய்து சம்மதிக்க வைத்தார்.
சூப்பர் ஸ்டாரின் அனிமேஷன் கேரக்டருக்கு ஜோடியாக நடித்தாலும், நிஜமாகவே சூப்பர் ஸ்டாருடன் நடிப்பதால் (”Motion Capture” செய்வதன் பொருட்டு) விஜி மிகவும் சந்தோஷத்தில் உள்ளார். இருக்காத பின்னே? ஒரே படத்தில் உலகம் முழுதும் பரிச்சயமாகும் வாய்ப்பையல்லவா பெற்றிருக்கிறார்.
“ரஜினியுடன் நடிக்க கிடைத்த வாய்ப்பை பெருமையாக கருதுகிறேன்”
சுல்தானில் நடிப்பதற்காக அவர் அதிக நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகவும் அதன் பொருட்டு அவர் மற்ற படங்களில் நடிக்க சிக்கல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அது குறித்து கூறிய விஜயலக்ஷ்மி, “ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன். படத்தில் ஒப்பந்தம் செய்யும்போதே எப்போது கூப்பிட்டாலும் படப்பிடிப்புக்கு வரவேண்டும் என்று கூறித்தான் ஒப்பந்தம் செய்தார்கள். அதை நான் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன். புதிதாக படங்களை ஒப்புக்கொல்லும்போதும் அதை அவர்களிடம் கூறிவிடுவேன். அதனால் எந்த பிரச்னையும் இல்லை. ரஜினியுடன் நடிக்க எத்தனை நாட்கள் வேண்டுமானால் காத்திருக்க தயார். அதுவே எனக்கு சந்தோஷம்தான்.”
விஜி சுல்தானில் இடம் பெற்றது ஒரு பெரிய கதை. அனிமேஷன் படம் என்பதால் சுல்தானில் ஹீரோயினாக யாரையும் ஒப்பந்தம் செய்யும் திட்டம் முதலில் கிடையாது. காட்சிகள் தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதால், படத்தை இயக்கம் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது தந்தையிடம் பேசி, அவரது கால்ஷீட் வாங்கி, அவரை நிஜத்தில் நடிக்கவைத்து அதை அப்படியே Capture செய்து அதன் மீது 3D Modelling செய்தார். மேற்படி காட்சிகள் பிரமாதமாக வரவே, ஹீரோயினையும் இதுபோல நிஜத்தில் நடிக்கவைத்து Capture செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இலியானாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று அது சரிப்படாமல் போகவே, அடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டவர்தான் விஜயலக்ஷ்மி. சம்பளம் முதல் அனைத்து நிபந்தனைகளையும் அவர் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். விஜியின் தந்தை அகத்தியன், ரஜினியுடன் தமது மகள் நடிப்பது குறித்து தமது மட்டற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மகளை ஆசீர்வதித்தார்.
முன்னணி இடத்தை பிடிக்க விஜயலக்ஷ்மியை வாழ்த்துகிறோம்.
4) கரும்பு கசந்தால் குற்றம் யாரிடம்?
எந்திரனுக்கு எதிராக ஏதாவது செய்திகளை எழுதிக்கொண்டேயிருக்கலாம் என்று வக்கிரத்துடன் காத்திருந்த போணியாகாத சில கட்டுரையாளர்களுக்கு இடி போல வந்தது சன் நெட்வொர்க் எந்திரனை தயாரிக்கும் அந்த செய்தி. வேறொன்று மில்லை இனி வாலை இஷ்டத்துக்கு ஆட்ட முடியாதே என்னும் கவலை தான்.
இருப்பினும், மாடு காணாமல் போனவனுக்கு மணியோசை கேட்டுக் கண்டே இருக்கும் என்னும் கதையாக எந்திரனை சுற்றிய நிகழ்வுகள் அவர்களுக்கு எதிர்மறையாகவே தெரிகிறது போல. எந்திரனை வாங்கியிருக்கும் சன்னை கலவரப்படுத்த - கொஞ்சம் மறைமுகமாக - மேற்படி கட்டுரையாளர் (22/12/08 அன்று வெளியான) டைம்ஸ் ஆப் இந்தியாவின் சென்னை பதிப்பில் முயன்றிருக்கிறார் என்பது தெளிவாக புரிகிறது.
மனம் போன போக்கில்…
எந்திரனை தயாரிக்கும் பொன்னான வாய்ப்பு தவிர்க்க இயலாமல் ஐங்கரனின் கரத்திலிருந்து நழுவிச் சென்றது எனவும் அதில் அவர்களுக்கு வருத்தம் தான் எனவும் நாம் முன்பே குறிப்பிட்டிருந்தோம். ஆனால் நேற்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவில் கட்டுரை எழுதியிருக்கும் அந்த செய்தியாளர் எந்திரன் கைமாறியது குறித்து ஐங்கரன் தற்போது நிம்மதி பெரு மூச்சு விடுவதாக குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமா, செலவை எக்கச்சக்கமாக இழுத்துவிட்டதாகவும் அதனால் ஐங்கரன் படத்தை கைமாற்றும் என்னத்திற்கு வந்ததாகவும் ஷங்கர் மீது பழி போட்டுள்ளார். ஷங்கர் பற்றியும் அவரின் Grandeur பற்றியும் தெரிந்தேதான் படத்தை தயாரிக்க முன்வந்தது ஐங்கரன். மேலும் படத்தை துவக்கும்போது ஐங்கரன் வெளியிட்ட பத்திரிகை குறிப்பிலேயே படத்தின் அதிக பட்ஜெட் குறித்தும் அதில் பணியாற்றும் ஹாலிவுட் கலைஞர்கள் குறித்தும் பெருமிதத்துடன் குறிப்பிட்டிருந்தது. உண்மை இப்படியிருக்க ஹாலிவூட் கலைஞர்கள் இடம்பெற்றது பற்றியெல்லாம் தன் மனம் போன போக்கில் உளறிக்கொட்டியிருக்கிறார் அந்த எழுத்தாளர்.
ஐங்கரனிலிருந்து எந்திரன் குறித்து இதுவரை யாருமே எதிர்மறையாக கூறாத நிலையில் தமது சொந்த கருத்துக்களை ஐங்கரனில் யாரோ கூறியதாக மேற்படி கட்டுரையாளர் அச்சேற்றியிருக்கிறார்.
மலேசியா மற்றும் சிங்கப்பூரிலேயே பார்த்துவிடுவோம். மற்ற நாடுகளை எங்கே சேர்ப்பது?
அது மட்டுமா, இன்னோர் பெரிய புளுகுமூட்டையை அந்த எழுத்தாளர் கட்டியிருக்கிறார். ரஜினியின் Overseas collection power வெறும் 15 கோடிகள் தானாம். இது எப்படியிருக்கு?
அடப்பாவிகளா…. மலேசியா மற்றும் சிங்கப்பூரிலேயே இந்த தொகையை எங்கள் சிவாஜி ஈட்டியிருக்குமே… அப்படியெனில் எண்ணற்ற மற்ற நாடுகளில் எல்லாம்? என்ன செய்வது… கரும்பு கசக்கிறது என்றால் குற்றம் வாயில் தானே தவிர கரும்பில் அல்லவே….!
ஷங்கரும் அவரது குழுவினரும் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்ததையெல்லாம் ஒரு குறையாக கூறியிருக்கிறார் மேற்படி எழுத்தாளர். தமிழ் சினிமாவில் குளிப்பதற்க்கே நட்சத்திரங்கள் மினரல் வாட்டர் கேட்கும் காலமய்யா இது. சூப்பர் ஸ்டார் நடிக்கும் ஒரு படத்தின் இயக்குனரும் அவரது குழுவினரும் முதல் வகுப்பில் பயணம் செய்வது ஒரு குற்றமா?
செலவை இழுத்துவிடுவதில் ஷங்கர் மீது நானும் அதிருப்தி கொண்டிருந்த காலம் உண்டு. ஆனால் முடிவில் தயாரிப்பாளர்களுக்கு ஒன்றிற்கு பல மடங்கு லாபத்தை அவர் பெற்றுக்கொடுக்கிறாரே? அதுவல்லவா முக்கியம்? ஷங்கரின் Grandeur மற்றும் Perfectionism படத்திற்கு வலுவை அல்லவா கூட்டுகிறது….!!!
அரைவேக்காடுகள் லிஸ்ட்டில் மற்றோர் சேர்க்கை
இத்துணைக் காலம் சிஃபியில் ரஜினிக்கெதிராக விஷ விதை தூவிக்கொண்டிருந்தவர் தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவிலும் அந்த பணியை செய்துவருகிறார். ஞானி, சாரு நிவேதிதா போன்ற அரைவேக்காடுகள் லிஸ்ட்டில் மேற்படி கட்டுரையாளர் சேர்ந்துவிட்டதை வேறு எப்படி சொல்ல?

அடக்கத்தின் சிகரம் ரஜினி - நானா படேகர் புகழாரம


சக்ரவர்த்தி. பாலிவுட்டின் சிவாஜி கணேசன் என்று இவரை தாராளமாக அழைக்கலாம். அந்த அளவு நடிப்பில் பெயர் பெற்றவர். உடன் நடிப்பவர்கள் அனைவரையும் தன் நடிப்பால் தூக்கி சாப்பிட்டுவிடுவார். எந்த இலக்கணத்திற்கும் கட்டுபடாத ஒரு காட்டுக்குதிரை இவர். கிடைக்கும் படங்களிலெல்லாம் இவர் நடிப்பதில்லை. தனக்கு பிடிக்கும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியாகியிருக்கும் பொம்மலாட்டத்தில் இவர் தூள் கிளப்பியிருப்பதாக சொல்கிறார்கள்.
இப்பேர்ப்பட்ட ஒரு நடிகர், சூப்பர் ஸ்டார் பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா? படியுங்கள்…
பாலிவுட்டையும் தமிழ் சினிமாவையும் ஒப்பிடக்கூடாது. இங்கு ரஜினி, கமல் உள்ளிட்ட ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். தென்னிந்திய நடிகர்கள் மீது நான் அதிகபட்ச மதிப்பு வைத்திருக்கிறேன். ரஜினிகாந்த் ஒரு தலைசிறந்த கல்வி நிறுவனம் போல. அவரிடத்தில் ‘தான்’ என்னும் ஆணவம் துளியும் இல்லை. இத்தனை ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்தாலும், அவர் இன்னும் மனிதாபிமானத்துடனும், அடக்கத்துடனும் நடந்துகொள்கிறார். அவர் காலை தொட்டு வணங்க கூட நான் தயார். அதே போல கமல் ஹாசனும், மொதன்லாலும் இருக்கிறார்கள். கே.பாலச்சந்தர், விஸ்வநாத், மற்றும் சிவாஜி கணேசன் போன்ற சிறந்த கலைஞர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிட்டாதது சோகமே.
மற்றபடி பொம்மலாட்டம் படத்தில் என் பாத்திரத்தை ரசித்ததற்கு சென்னை மக்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். உங்கள் மூலம் ரஜினிக்கு ஒரு “Hi” சொல்ல ஆசைப்படுகிறேன்.
ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தான் நானா இவ்வாறு கூறியிருந்தார்.
இங்குள்ள வெந்தது வேகாதது, நண்டு சிண்டு நார்த்தங்காய், விடலை, விரல் சூப்பும் நடிகர்கள் நானா படேகர் சொல்வதை கொஞ்சம் கேட்கவேண்டும். அப்போதாவது தாம் எவ்வளவு பெரிய மனிதர் மற்றும் நடிகர் ரஜினியுடன் வாழ்ந்துவருகிறோம் என்று அவர்களுக்கு உறைக்கிறதா என்று பார்க்கலாம்.

ரஜினி ஒரு அபூர்வ நாயகன்-மனீஷ்


என்னுடைய பதினெட்டு ஆண்டு கால திரையுலக அனுபவத்தில் நான் பார்த்த முதல் அதிசய மனிதர் சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்கிறார் பிரபல ஆடை வடிவமைப்பு நிபுணரான மனீ்ஷ் மல்ஹோத்ரா.இந்தியாவின் மிகச்சிறந்த ஆடை வடிமைப்பாளர்களில் ஒருவர் மனீ்ஷ் மல்ஹோத்ரா. சிவாஜியில் தொடங்கி இப்போது எந்திரன் வரை இவர்தான் ரஜினிக்கு காஸ்ட்யூமர்.சென்னையில் தான் புதிதாக வடிவமைத்துக் கொடுத்த ஒரு ஹை ஸ்டைல் உணவகத்தைத் திறந்து வைக்க வந்திருந்த, மனீ்ஷ் மல்ஹோத்ரா, பின்னர் நிருபர்களிடம் பேசினார். நானும் அமிதாப், ஷாரூக், ஆமிர் கான் என பலருடன் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் ரஜினியுடன் பணியாற்றியது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். அவரைப் போன்ற எளிமையான மனிதரைப் பார்க்க முடியாது. ரஜினியுடன் ஒரு முறை பழகினாலே, பல விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். அவர் போல நேரம் தவறாத மனிதர்களைப் பார்ப்பது இன்றைய திரையுலகில் அரிது. அவர் நமக்கு முன்னால் வந்துவிடுவாரே என்ற நினைப்பே, என்னை சீக்கிரம் வரவைத்துவிடுகிறது.

அவருடன் பழகுபவர்கள் பெரும்பாலும் தங்கள் தவறுகளைத் தாங்களே திருத்திக் கொள்கின்றனர். இதுதான் ரஜினி எனும் மனிதரின் சிறப்பு. அவரை எப்போதும் ஒரு உலகப் புகழ் பெற்ற நாயகனாகப் பார்க்க முடியாது. ஒரு எளிய மனிதராகத்தான் பார்க்க முடியும். அது எப்படி அவருக்கு மட்டும் சாத்தியமாகிறது என்று புரியவில்லை என்றார் மனீஷ்.

'Endhiran' goes to Vellore


After shooting a song sequence in the parts of North Chennai, the cast and crew of Rajinikanth starrer 'Endhiran' including Aishwarya Rai Bachchan and director Shankar is now in Vellore to shoot some important sequences for the movie.
Rajinikanth, Aishwarya Rai and Shankar reached Vellore by road and they were taken to Vellore Institute of Technology where shooting was done amidst tight security. The details about Rajinikanth's visit to Vellore had been kept secret and security was tight in the vicinity.
A few scenes involving Rajinikanth and Aishwarya were canned by Rathanvelu with Shankar giving instructions to his crew. Produced by Sun Pictures, 'Endhiran' has musical score by A R Rahman.

Rajinikanth hitchhikes for 'Endhiran'


Rajinikanth, who was struck in a traffic-jam near Ennore, where the shooting of 'Endhiran' was on, was given assistance by a group of stunt men to reach the shooting spot without getting delayed on Monday. They managed to cover Rajinikanth with a huge coat and a helmet and took him on a motorcycle to the shooting spot.
Rajinikanth was shooting for the movie at Ennore along with Aishwarya Rai Bachchan. Director Shankar was canning a song sequence. Rajinikanth who left his residence in a car got struck up in a traffic jam near Ennore. He called up Shankar and said that it would be too difficult for him to reach the place. A busy industrial area, the road was blocked by several rows of Lorries.
Shankar came up with an idea and sent a couple of stunt men with motorcycles. They helped Rajinikanth cover his face with a helmet and gave him a long coat. Then they took him in the two-wheeler to the shooting spot.
All the crew members including Aishwarya were surprised to know that Rajnikanth had reached the place in a two-wheeler.

Endhiran Movie Photo Gallery











Sun TV Network’s movie production arm - Sun Pictures will be handling the production of Endhiran, which stars Rajnikanth and Aishwarya Rai Bachchan. The movie was earlier being produced by Ayngaran International, which is a part of Eros International.
Enthiran is India’s biggest project in terms of grandeur, splendor and Star Cast. SUN TV Network Ltd One of India’s largest entertainment conglomerate announced that it would be producing the ENDHIRAN. It is Superstar Rajinikanth’s next live action movie. This Multi crore project is to be directed by Shankar, Music is by AR Rahman and Aishwarya Rai stars along with Rajinikanth. The Enthiran movie will be released simultaneously in Tamil, Telugu, Hindi and other languages by the end of next year. The movie boasts of CG, special effects and stunt sequences and will have top notch technicians from Hollywood working on it.
Rajnikanth said, “This is India’s biggest movie and I am very happy to work with Sun Pictures and Mr Kananithi Maran.” At the time of filing this report, Eros International officials were not available for comment.

Rajini TV launched on Superstar's 59th birthday


Rajinikanth's fans have come together to float a web TV called http://www.rajnitv.in/, at a function held in Chennai on Friday as part of the actor's 59th birthday celebrations.
It is being started with the blessings of Rajnikanth and would go a long way in spreading his message to all his fans across the world, said Arcel Murugan, founder of the Rajini web TV channel.
'The channel will air the voice of Rajni fans, popular scenes and dialogues from Rajinikanth films. Also we would be taking sincere efforts to promote the long lost folk arts of Tamilnadu. Short films and documentaries on various themes will also be aired', said Murugan.
Launching the web TV, actress Meena said, "I have acted in six movies with Rajinikanth. He is an epitome of simplicity. I learnt a lot while working with him."
Noted director RC Sakthi, who directed 'Dharma Yuddham' starring Rajinikanth and Bairavi's director Kalaignanam also spoke on the occasion.
A large number of Rajinikanth fans took part during the launch of this web TV.

TOP 12 NAMES THAT MADE RAJINI SPECIAL


The birthday of Superstar. One more year has passed, but the magic has not waned one bit and it is great to know that Superstar is still keen to enthrall us, at least one more time. Though celebrations this time will be a bit muted because of the tough times that have come to pass, we look back at some of the landmark roles of a wonderful career.




16 Vayathinile – Parattai
How often is the one liner delivered by a villain remembered and repeated for years? Rarely, if ever and it took one of Rajini’s finest performances to make this happen. In Bharathiraja’s raw and near perfect depiction of a village had two of Tamil cinema’s most memorable all time performances, Parattai and Chappani.





Mullum Malarum – Kali
This was a critic’s Rajini movie, the first any critic would remember if you were to ask them about Rajini’s acting skills. The movie marked the association of Rajini with Mahendran, the master of realistic depiction of life.







Ninaithale Inikkum – Deepak
Maybe one of the most jovial characters Rajini has played on screen. The lighter moments in this movie that are lit up by Rajini’s humor are numerous. Even if he is not the central character or the so called hero in this movie, his character is remembered as one of equal importance. One can also say that this was the only time that Rajini shouldered the responsibility of a full time comedian showing that he can pull off even that convincingly.









Murattu Kalai – Kalaiyan
This movie definitely occupies a pedestal in every Rajini fans’ mind. Murattu Kalai catapulted Rajini’s stardom to great heights. The ‘Pothuvaga en Manassu Thangam’ song and the famous Jallikattu scene are remembered even today.











Thillu Mullu – Indiran, Chandran
This counts among the movies that are proof of the fact that before being Superstar, Rajini is a complete actor with enviable versatility. The contrasting portrayal of two personalities in the same movie with unassuming ease is definitely among Rajini’s best performances, no wonder it came under K. Balachander. Pity such scripts have not been written for Rajini again.













Sri Raghavendra – Sri Raghavendra
This movie is special to Rajini for very personal reasons. His devotion towards Sri Raghavendra is well known as is his strong spiritual side. The chance to bring alive Sri Raghavendra on screen should have gone only to Rajini and he did not let it go.















Moondru Mugam - Alex Pandian
If you create a list of cop roles in Tamil cinema, Alex Pandian should figure right on top of that list. Rajini himself has played many other cop roles, but none of them have left such a lasting impact. Even today, an entirely new generation of actors looks up to Alex Pandian for inspiration each time they play a cop.

























Anbulla Rajinikanth – Rajinikanth









Not a great movie, but only great actors are afforded the honor of playing themselves on screen for a considerable length of time. It might have also been the only instance when a lead hero played himself for a full length movie, every one loved it. It showed that people were very much fans of Rajinikanth, not just the characters that he played.





















Thalapathi – Surya
It takes great directors to get great performances, even out of great actors. The happy thing is that Mani Rathnam and Rajini have worked together, the sad thing is that it has not happened again. Thalapathi is another movie (after Mullum Malarum) which brought out the serious and highly skilled actor in Rajini.

























Baasha – Manick Baasha
Maybe, the biggest hit of Superstar’s career, in terms of impact that it had. The fights, the style, the punch dialogues, just about everything is etched in the mind of every Rajini fan, no, of every one who watches Tamil cinema. Such movies happen only once in the career of even the greatest.



























Chandramukhi – Dr. Saravanan
It was a comeback of sorts for Superstar. There were sections and people who were trying to suggest that the Superstar phenomenon was over with BABA. But Rajini proved, as he said during the Chandramukhi victory function that ‘failure is not when you fall, but when you refuse to get up.’







































































































































Billa – Billa, Raja















Rajini's dual role, one of which has a touch of effeminate behavior, and the super stylist action sequences made Billa immortal. And, not to forget, the foot thumping number 'my name is Billa'. Billa charm was proved again recently when it was remade after decades.

Rajini will be working on his birthday


Actor Rajinikanth will be in Hyderabad on his birthday on 12th of December. He says he will be doing what he likes to best on his birthday, acting. Despite his words not to celebrate his birthday for Sri Lankan Tamils, his fans have planned to organize a mega celebration throughout the state. Rajini will take a flight to Hyderabad on Wednesday night to take part in “Sultan: The Warrior” movie shoot, which is being directed by his daughter.

Economic crisis, Rajini’s salary plummets


The financial slowdown across the globe has finally caught up with the film industry. There were reports that many big budget films were shelved by corporate productions. The classic example of this happens to be Kamal Haasan’s Marma Yogi.
Several Bollywood actors, including Sanjay Dutt, have come forward to
reduce their pay packet keeping in mind the present scenario. The latest to join this bandwagon is the Superstar. Rajinikanth has apparently conferred with Aishwarya Rai Bachchan to reduce her salary by 30 per cent for Endhiran. It is said that she has also done so. Sources say that they make get back the amount after Endhiran fetches profits after its release.

Rajini's fans disappointed







The superstar's fans were gearing up to celebrate their star's birthday which falls on the 12th of December. But Rajinikanth had requested them not to celebrate his birthday as the killing of innocent Tamils in Sri Lanka continues.
Rajini had left Chennai on December 10th to Hyderabad where he will
participate in the shooting of Sultan – The Warrior. The film is directed by his daughter Soundarya Rajinikanth. The shooting is on at the Ramoji Film City. The star is expected back in the city on December 15th. It is worth mentioning here that Rajini never stays in the city for his birthdays and prefers to spend time on his own or with his family.

“வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்” - என்று ஏன் கூறுகிறார்கள்? - ரஜினி விளக்கம்!!


நேற்றைய பதிவில் துக்ளக் இதழில் ரஜினி எழுதிய கட்டுரையைப் பற்றி கூறுகையில் சில கேள்விகளை வெளியிட்டு அதற்க்கு சூப்பர் ஸ்டார் அருமையான பதிலை ஒரே ஒரு கட்டுரையிலேயே ஜஸ்ட் லைக் தட் கூறியிருப்பார் என்று சொல்லியிருந்தேன்.
http://rajinispecial.blogspot.com/2008/12/blog-post.html
கட்டுரையின் தொடர்ச்சியை இப்போது பார்க்கலாம்.

திருக்குறளும் கீதையும் கலந்து ரஜினி தந்த பாடம்
திருக்குறளை பற்றி உங்களுக்கு தெரியும். ஈரடியால் உலகையே அளந்த குறளை பற்றி கூறிய இடைக்காடர் என்னும் புலவர், “கடுகை துளைத்தேழ் கடலை புகட்டி குறுகத் தரித்த குறள்” என்று கூறினார். அவ்வையோ, கடுகை அல்ல அணுவை என்றார். “அணுவைத் துளைத்தேழ் கடலை புகட்டி குறுகத் தரித்த குறள்” என்றார். அதாவது அணுவை பிளப்பது மற்றும் அதன் மூலம் பெரும் சக்தி உண்டாவது பற்றி நம் புலவர்கள் சங்க காலத்திலேயே கூறிவிட்டார்கள். (Atom fission and energy). ஓகே. மேட்டருக்கு வருவோம். அத்தகைய சிறப்பு பெற்ற குறள் முழுதையும் ஒரே ஒரு கட்டுரையில் சூப்பர் ஸ்டார் தந்திருக்கிறார் என்றால் சும்மாவா?
குறள் மட்டுமா? கீதையும் அதில் அடக்கம். அது தான் மிகப் பெரும் ஆச்சரியம்!
ஒளிந்திருக்கும் பன்ச் டயலாக்குகள்
தவிர நிஜ வாழ்க்கையிலும், சினிமாவிலும் பல்வேறு காலகட்டங்களில் அவரால் உச்சரிக்கப்பட்ட பல வரலாற்று புகழ் பன்ச்கள் (இந்த தொடர் வெளியானதற்கு பல ஆண்டுகள் முன்பே கூட) இந்த கட்டுரையில் ஆங்காங்கே ஒளிந்திருக்கும். அது இன்னும் ஆச்சரியம்!!
நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்; ஆனா கைவிடமாட்டான்.
கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. அப்படி கிடைக்கிறது என்னிக்குமே நிலைக்காது.
ஆண்டவன் எல்லாருக்கு எல்லாம் கொடுக்குறதில்லை. ஏதாவது ஒரு குறை வைக்கிறான். ஏன்னா, குறையே இல்லைன்னா, நாம ஆண்டவனையே மறந்துடுவோம்.
உலகினில் எதுவும் நிரந்தரமில்லை. உறங்கிடும் வரையில் சுதந்திரமில்லை.
உன் வாழ்க்கை உன் கையில்
என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களே
தமிழக மக்கள் இதயங்கள் இரும்பாலான ஈர இதயங்கள். உள்ளை நுழைவது மிகவும் சிரமம். அப்படி ஒரு முறை நுழைந்துவிட்டால், அவ்வளவு சுலபத்தில் வெளியே வரமுடியாது.
நீங்க நமக்கு செஞ்ச துரோகத்தை நாம மன்னிச்சிட்டோம். ஆனா ஏழைங்களுக்கு செஞ்ச துரோகத்தை நாம் மன்னிச்சாலும் மேல இருக்குறவன்….மன்னிக்கவே மாட்டான்.
எல்லாம் அவனுக்கு தெரியும். அவன் பார்த்துகிட்டு இருக்கான். (மக்களை நோக்கி) தெய்வம் அவன். (ஹொகேனக்கல் மேடையில் சூப்பர் ஸ்டாரின் உரை ஞாபகமிருக்கிறதா?)
இப்படி அடுக்கி கொண்டே போகலாம். அப்புறம் இன்றும் பிரேக் விட்டுவிட்டு நாளை தான் போட முடியும். அதனால், என்னுடைய முன்னுரையை, இத்துடன் முடித்துகொள்கிறேன்.
இந்த கட்டுரையை படித்துவிட்டு, விடுபட்ட பன்ச்கள் இருந்தால் தயவு செய்து எனக்கு கூறுங்கள்.
இனி சூப்பர் ஸ்டார் எழுதிய அந்த வைர வரிகள். கட்டுரைக்கு தலைப்பை கவனியுங்கள். ஆரம்பமே அசத்தல் தான்.
குறிப்பு: கட்டுரையில் சூப்பர் ஸ்டாரின் பெயர் எந்த வித அடைமொழிகளும் இன்றி ரஜினிகாந்த் என்று மட்டும் தான் இடம்பெற்றது.
தானே சூட்டிக்கொள்ளும் பட்டத்தையே கழுதை வால் போல கூடவே அனைத்து இடங்களிலும் அரவணைத்து செல்லும் நடிகர்களுக்கு மத்தியில் மக்களாக பார்த்து சூட்டிய ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை ரஜினி என்றுமே தனக்கு தானே சூடி அழகு பார்த்ததில்லை. நேற்றைய ரசிகர்கர் சந்திப்பு முதல் அவரது சொந்த தயாரிப்பான பாபா பட விளம்பரம் வரை சூப்பர் ஸ்டார் என்கின்றன வார்த்தை எங்குமே இடம்பெறவில்லை. இந்த கட்டுரையும் அதுபோலத்தான்.
…………………………………………………………………………………………………………………

“மக்கள் மனதில் இறைவன் இருக்கிறார்” - ரஜினிகாந்த்
“கஷ்டப்படுகிறவர்களுக்கு, துன்பம் அனுபவித்தவர்களுக்கு ஆண்டவன் ஒரு நாள் உதவாமற்போக மாட்டான். எப்பொழுதுமே கஷ்டப்படட்டும் என்று யாரையும் ஆண்டவன் கை விட்டுவிட மட்டான். ஆரம்பதிலிருந்து கடைசி வரை கஷ்டப்பட்டே வாழ்ந்து செத்தவர்கள் இந்த உலகத்தில் யாரும் கிடையாது. அதே போல, பிறந்த தேதியிலிருந்து இறுதிவரை சந்தோஷத்துடனே வாழ்ந்து மடிந்தவர்களும் கிடையாது. அது தன் இயற்கை என்று சொல்லும்பொது, அதில் பல அம்சங்களும் அடங்கி இருக்கும். கஷ்டம் - சுகம்; பாவம் - புண்ணியம்; நல்லவர்கள் - கெட்டவர்கள்…. என்று பல வகையான அனுபவங்களும் கொண்டதுதான் இயற்கையின் போக்கு. வாழ்க்கையில் கஷ்டதையும் ஒரளவாவது அனுபவித்தால்தான் சுகத்தின் பலன் நமக்கு முழுமையாகக் கிட்டும். நீங்கள் ஓர் ஏர் கண்டிஷ்ண்ட் ரூமிலேயே தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால், அதனுடைய அருமை அவ்வளவாகத் தெரியாது. ஆனால் சிறிது நேரம் வெயிலில் இருந்துவிட்டு, அதன் பிறது ஏ.சி.ரூமுக்குப் போனால், அப்பொழுது அதன் அருமை நன்றாகவே தெரியும்.
ஆகையால்தான், மனிதர்களின் இந்த இயல்பை அறிந்த ஆண்டவன், கஷ்டம், சுகம் இரண்டையுமே வாழ்க்கையில் சேர்த்தே வைத்திருக்கிறான். நமக்கு சுகமான அனுபவங்கள் வரும்போது நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். கஷ்டமான அனுபவங்கள் நேரிட்டால், மிகவும் வெறுத்துப்போய் விடுகிறோம்.
இப்படிப்பட்டவர்களை ஆண்டவனுக்குப் பிடிக்காது என்று நான் நினைக்கிறேன். இதனால் தான் சில பேருக்கு சில நேரங்களில் ஆண்டவனின் அருள் கிட்டுவதில்லையோ என்றுகூட எனக்கு தோன்றுகிறது. சுகத்தை மட்டும் விரும்பி ஏற்கிற மனிதன், கஷ்டம் வரும்போது அதை பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால், அவன் இறைவனையோ, இயற்கையையோ புரிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம்.
வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமான விஷயமல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு இன்பம் கிட்டும் பொழுது அது நிலையானது அல்ல என்ற உணர்வு நம்முள் இருந்தால், நாம் அடக்கத்துடன் அந்த இன்பத்தை அனுபவிப்போம். அதே போல், கஷ்டம் வரும்பொழுது அதுவும் நிலையானதல்ல என்று நாம் உணர்ந்து கொண்டால் அந்த கஷ்டத்தின் சுமை தாங்க முடியாமல் அப்படியே நொந்து போய் நொறுங்கிவிட மாட்டோம். வாழ்க்கையில் இரண்டும் கலந்துதால் இருக்கும். அதுதான் நல்லதும் கூட.
ஒரு விஷயத்தை நாம் அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டும். மற்ற கஷ்டங்களோடு ஒப்பிடும்போது பண கஷ்டம் - அதாவது பணம் இல்லை என்கிற கஷ்டம் பெரிய கஷ்டமே இல்லை. சின்ன வயதிலேயே நமக்கு மிகவும் வேண்டியவர்கள் இறந்து போவது, சரியான நேரத்தில் நல்ல இடத்தில் கல்யாணம் செய்து நன்றாக வாழ முடியவில்லை என்கிற நிலை; நமது குழந்தைகள் முறையாக வளரவில்லை என்ற குறை, நமக்கு மிகவும் வேண்டியவர்களிடமே ஏற்பட்டுவிடுகிற மனஸ்தாபங்கள்; நமக்கு மிகவும் பிடித்தவர்களே நம்மை ஏமாற்றி விடுகிற நிலைமை… போன்ற கஷ்டங்கள் நம்மை மிகவும் பாதிக்ககூடியவை. நான்கூட முன்பெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தது உண்டு. பணம் இருந்தால் என்ன துன்பம் வந்தாலும் தாங்கி கொண்டுவிட முடியும் என்று. ஆனால், அப்படி இல்லவே இல்லை என்பதை நாம் உணர்ந்துவிட்டேன். பணம் இல்லையே என்ற கஷ்டம் கொஞ்சம் தான் வேதனையைத் தரும். ஆனால், நான் மேலே குறிப்பிட்ட மாதிரி நிலைமைகள் தான் நமக்கு அதிக வேதனையை கொடுக்ககூடிய கஷ்டங்கள்.
பிரச்சனைகள் வரும்போது - அது பணப் பிரச்சனையோ, அல்லது மன நிலையைப் பாதிக்கக்கூடிய வேறு ஏதாவது பிரச்சினையோ - என்ன சம்பவங்கள் நடந்தாலும், அதனால் உடனே மனம் உடைந்து அந்தக் கஷ்டத்தின் சுமையைத் தாங்க முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டு வாழ்வதில் அர்த்தமில்லை. அந்த கஷ்டத்தை தீர்க்க, உடனடியாக முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும். எப்படி தீர்வு காண முடியும் என்று யோசிக்க வேண்டும். அந்த பிரச்சினை எப்படி தீர்வு காண முடியும் என்று யோசிக்க வேண்டும். அந்த பிரச்சினை எப்படி யோசிக்க வேண்டும். அந்த பிரச்சினை எப்படி உருவானது? ஏன் உருவானது? யாரால் உருவானது? அதில் நம் தவறு என்ன? என்றெல்லாம் தீர ஆராய்ந்தால், பிரச்சினை உருவானதற்கான காரணம் தானாகப் புரிந்துவிடும். தவறு நம்முடையதாக இருந்தால், மன்னிப்புக் கேட்க வேண்டும். மற்றவர்களுடைய்தாக இருந்தால், அதை அவர்களுக்கு புறிய வைக்க வேண்டும். ஒரு பொய் சொன்னால் அதை மறைப்பதற்கு நூறு பொய்கள் சொல்ல வேண்டி வருவது போல - ஒரு கஷ்டத்தை நிவர்த்தி செய்வதில் உடனே கவனம் செலுத்தாவிட்டல், அதைத் தொடர்ந்து மேலும் மேலும் பல கஷ்டங்கள் உருவாகிவிடும்.
ஒன்றை மட்டும் திட்டவட்டமாகச் சொல்கிறேன். ஆண்டவன் எங்கேயும் இல்லை. மக்களுடைய இதயத்தில் தான் - மனதில் தான் இருக்கிறார். நான் எத்தனையோ வெளி நாடுகளைச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். உலகத்தின் பல பாகங்களையும் சுற்றி வந்திருக்கிறேன். தமிழக மக்களுக்கு இருக்கிற மனித நேயம், கருணை, அந்த மனித இயல்பு வேறு யாருக்கும் எங்கேயும் கிடையாது. அதனால் தான் நம்முடைய தமிழ் நாட்டை ‘வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்’ என்று சொல்கிறார்கள்.
ஒருவனிடம் திறமை இருந்து, நல்ல எண்ணம், நல்ல மனிதத்தன்மையும் இருந்தது என்று சொன்னால், அவனுடைய மொழி பற்றியோ, ஜாதி பற்றியோ, எதைப் பற்றியும் தமிழக மக்கள் கவலைப்பட மாட்டார்கள். ஆகவே இந்த மாதிரி உயர்ந்த குணம் உள்ள மக்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வரைமுறை இருக்க வேண்டும் இல்லையா? இவர்களுக்கு ஏதாவது கெடுதல் செஞ்சா, துரோகம் செஞ்சா - அவர்களை ஆண்டவன் தண்டிக்காமல் விடவே மாட்டன். வினை விதைத்தவன் வினை அறுப்பான். இது உறுதி.”
- நன்றி : துக்ளக்

ரஜினிபேன்ஸ்.காம் ரத்த தான முகாம்… நாள், இடம்!


சூப்பர் ஸ்டார் ரஜினியின் 58-வது பிறந்த நாளையொட்டி ரஜினிபேன்ஸ்.காம் நடத்தும் ரத்த தான முகாம் குறித்து ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.
இப்போது இதற்கான இடம் மற்றும் இறுதி ஏற்பாடுகள் முடிவாகியுள்ளன.
சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட்டில் உள்ள மவுண்ட் மெடிக்கல் சென்டரில் (முகவரி: 5/66, பட் ரோடு சந்திப்பு, செயின்ட் தாமஸ் மவுண்ட், சென்னை-18).
வருகிற டிசம்பர் 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமுக்கு டாக்டர் எம்.சச்சிதானந்தன், டாக்டர் சுபாஷிணி ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். முகாமுக்காக நமது தளம் வடிவமைத்துள்ள பேனர்தான் இங்கே நீங்கள் பார்ப்பது.
உயரிய பாதுகாப்பு மற்றும் சுகாதாரமான முறையில் ரத்த தானம் நடைபெற மருத்துவர் குழு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த விழா முழுக்க முழுக்க http://www.rajinifans.com/others/contactus.php தனது சொந்த முயற்சியில் நடத்துவது. எந்த வித நிதியுதவியும் யாரிடமும் பெறப்படவில்லை. இதுவரை தலைவர் பிறந்த நாளுக்கு அப்படியொரு முயற்சியில் நாம் இறங்கவுமில்லை என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தலைவர் பிறந்த நாளை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் http://www.rajinifans.com/others/contactus.phpமுயற்சியில் நீங்களும் கரம் கோர்க்கலாமே…
மேலும் விவரங்களுக்கு:http://www.rajinifans.com/others/contactus.php
ராம்கி - 9444453694கோபி: 9894936203கலிஃபுல்லா: 9443288198சந்தோஷ்: 9841752821அருள்: 9791892290கணேஷ்: 9994739007
-எஸ்.சங்கர்

பிரபுதேவாவின் மகன் திடீர் மரணம்; ரஜினி நேரில் சென்று அஞ்சலி


இயக்குனர் பிரபு தேவாவின் மகன் விஷால் புற்று நோய் காரணமாக திடீரென்று மரணமடைந்தான். திரையுலக முக்கியஸ்தர்கள், நடிகர், நடிகையர் பலர் நேற்று பிரபு தேவாவின் வீடிற்கு சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
பிரபல நடிகரும் இயக்குனருமான பிரபு தேவா ரம்லத் என்கின்ற பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு விஷால், ரிஷி தேவா, மற்றும் ஆதித் தேவா என மூன்று மகன்கள் உண்டு.
மூத்தவன் விஷாலுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கான்சர் கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சையை அளித்துவந்தார் பிரபு தேவா. அவன் மீது மிகவும் பாசம் வைத்திருந்தார். அண்மையில் சுவிட்சர்லாந்தில் நடந்த வில்லு படத்தின் படப்பிடிப்பிற்கு மகனையும் அழைத்துக்கொண்டு சென்றிருந்தார் பிரபு தேவா. திரும்பி வந்ததும் மகன் சுகவீனமடைந்தான். இதையடுத்து அவனுக்கு தீவிர சிகிச்சையளித்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3.30 க்கு விஷால் மரணமடைந்தான்.
ரஜினி, கமல் அஞ்சலி
மகனது உடலைப் பார்த்து பிரபு தேவாவும் அவரது மனைவியும் கதறி அழுதனர். ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்தவர்கள் முக்கியப் பிரமுகர்கள், நடிகர் நடிகையர் பிரபு தேவாவின் வீடிற்கு சென்று அவரது மகனுக்கு அஞ்சலி செலுத்தினர். ரஜினி தனது குடும்பத்துடன் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பிரபு தேவாவின் வீட்டிற்க்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா, மற்றும் மனைவி லதா ஆகியோரும் உடனிருந்து சிறுவன் விஷாலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சிறுவன் விஷால் உடல் நேற்று மாலை 3.00 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
சூப்பர் ஸ்டாரின் தீவிர விசிறி
சிறுவன் விஷால், சூப்பர் ஸ்டாரின் தீவிர விசிறி என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு நடைபெற்ற பிரபு தேவாவின் சகோதரர் நாகேந்திர பிரசாத்தின் திருமண நிகழ்ச்சிக்கு ரஜினி வந்த போது, ஓடி வந்து பிரியமுடன் அவருடன் புகைப் படமெடுத்து கொண்டான். சிறுவனின் மரணம் ரஜினியை மிகவும் பாதித்தது. ஆகையால் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, பிரபு தேவாவிற்கு ஆறுதல் கூறினார் ரஜினி.
தங்கள் மகனை இழந்து வாடும் பிரபுதேவாவின் குடும்பத்தாருக்கு நம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். விஷாலின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வோம்.

எந்திரனில் கிச்சு கிச்சு மூட்டப்போகும் காமெடிப் பட்டாளம

திட்டமிட்டபடி, ஸ்மூத்தாக போய் கொண்டிருக்கிறது எந்திரன் படப்பிடிப்பு. சென்னையின் முக்கிய இடங்களில் காதும் காதும் வைத்தாற்போல படப்பிடிப்பு நடந்து வருகிறது. லொக்கேஷன் பற்றி தெரிந்துகொண்டு அங்கு யாரும் செல்வதற்கு முன், படப்பிடிப்பு முடிந்து விடுகிறது.
எனக்கு கிடைத்த தகவல்களை உங்களுக்கு தெரிவிக்கிறேன். உண்மை விபரங்கள் சற்று முன்னர் பின்னர் இருக்கலாம்.
சென்னை சுற்றி நடக்கும் எந்திரன் படப்பிடிப்பு
சென்னையில் கிழக்கு கடற்க்கரை சாலை, அடையாரில் உள்ள ஒரு ப்யூட்டி பார்லர் மற்றும் தி.நகரில். உள்ள ஆலூக்காஸ் ஜூவல்லரி ஆகியவற்றில் எந்திரன் படப்பிடிப்பு நடந்தது. இதையடுத்து, சமீபத்தில் சென்னை கடற்கரை செவாலியே சிவாஜி சிலை அருகே உள்ள டி.ஜி.பி. அலுவலகம் அருகாமையில் செட் போடப்பட்டு ரகசியமாக படப்பிடிப்பு நடந்தது. அடுத்து தண்டையார்பேட்டையில் உள்ள பாரத் பெட்ரோலியம் கிடங்கில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயற்க்கை எழில் கொஞ்சும் டாப்ஸ்லிப்பில் எந்திரன் படப்பிடிப்பு
இதை முடித்துவிட்டு, எந்திரன் யூனிட் டாப்ஸ்லிப் பயணமாகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள ஆனைமலையில் உள்ள ஒரு சுற்றுலா தலம்தான் டாப்ஸ்லிப். மூங்கில் காடுகள், யானைகள மற்றும் பறவைகள் சரணாலயத்துக்கு பெயர் பெற்ற இடம் இது. இயற்க்கை எழில் கொஞ்சும் பசுமையான காடுகள், மர வீடுகள் இதன் தனி அழகு.
மழை பெய்த பிறகு, பசுமை பூத்துக்குலுங்கும் தருணத்தில் டாப்ஸ்லிப் மிகவும் அழகாக இருக்கும்.
தற்போது தமிழகத்தில் பரவலாக பெய்த கன மழையையடுத்து, நீர் நிரம்பி டாப்ஸ்லிப் பகுதியில் இயற்க்கை எழில் கொஞ்சுகிறதாம். எனவே ஷங்கரால் உடனே லொக்கேஷன் ஒ.கே. செய்யப்பட்டுவிட்டது. சென்னை ஷெட்யூல் முடிந்த பிறகு டாப்ஸ்லிப் பயணமாகிறது எந்திரன் யூனிட்.
‘அம்மாடியோவ்’ - காஸ்ட்யூம் செலவு!!!
சூப்பர் ஸ்டாரையே ‘அம்மாடியோவ்’ என்று சொல்லவைத்திருக்கிறது படத்திற்கான காஸ்ட்யூம் செலவு. அதற்க்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை மட்டுமே கிட்டத்தட்ட் ஐந்து கோடி ரூபாயாம். ஒரு படமே எடுத்துவிட கூடிய தொகை என்பதால், சூப்பர் ஸ்டார் மிகவும் தயங்கினாராம். இருப்பினும் ஷங்கர் மேல் உள்ள நம்பிக்கையின் காரணமாக சூப்பர் ஸ்டார் ‘Go ahead’ என்று பச்சைக்கொடி காட்டியதாக தகவல்.
காமெடி செய்யப்போவது யாரு…. நம்ம சூப்பர் ஸ்டாரைப் பாரு…!!
ரசிகர்களிடம் இருக்கும் முக்கிய கேள்வி, எந்திரனில் காமெடியை கையாளப் போவது யார்என்பது தான்…
சூப்பர் ஸ்டாருக்குள் இருக்கும் ஒரு அருமையான காமெடி நடிகரை மறந்துவிட்டீர்களா என்ன? பெரும்பாலான காமெடி காட்சிகளை சூப்பர் ஸ்டாரே கவனித்து கொள்வார். ரோபோவாக நடிக்கும் சூப்பர் ஸ்டாரே நம்மை சிரிக்க வைக்கும் பணியையும் பார்த்துக்கொள்வார் என்று தெரிகிறது. (ப்யூட்டி பார்லர் சீன் ஞாபகம் வருகிறதா? - வேலையைப் பாரும்மா, இது ஒரு ரோபோதான்!!)
இருந்தாலும் எந்திரனுக்கு துணையாக நம்மை கிச்சு கிச்சு மூட்ட மேலும் சில காமெடியன்களை களம் இறக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து, கருணாஸிடம் பேச்சுவார்த்தை நடந்து, ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டார். மனிதர் அட்வான்ஸ் கூட வாங்கியாச்சு. பாபாவுக்கு அடுத்து சூப்பர் ஸ்டாருடன் மீண்டும் இணைகிறார் லொடுக்கு பாண்டி.
கருணாஸை தவிர எந்திரனில் கலகலக்கப் போகும் மற்றொருவர் லொள்ளு சந்தானம். எந்த நேரமும் இவரும் ஒப்பந்தம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. குசேலனில் நம்மை நற நறக்க வைத்தவர் எந்திரனில் கிச்சு கிச்சு மூட்டுவார் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம். பார்க்கலாம்.
குறிப்பு:
சூப்பர் ஸ்டாரைப் பற்றியும் அவரது படங்கள் பற்றியும் உங்களுக்கு சரியான தகவல்கள் தர rajinifans.com, envazhi.com மற்றும் நமது onlyrajini.com இருக்கும்போது பொய்களையே எழுதிக் குவித்து வரும் ரஜினி விரோத தளங்களான கப்ஸா வூட்ஸ், சிஃபி ஆகிய தளங்களை முழுமையாக புறக்கணியுங்கள்.
வலைத்தளம் நடத்துவதன் மூலம் ஏராளமாக சம்பாதிக்கும் மேற்படி தளங்கள் தங்கள் வாசகர்களுக்கு உண்மை செய்திகளையே தரவேண்டும் என்று நினைக்காதது பெரிய சோகம். ஒரு காலத்தில் தரமான செய்திகளை மட்டுமே (நம் எதிர்ப்பு செய்தியாக இருந்தாலும்) அளித்து வந்த சிஃபி தற்போது தரத்தில் மிகவும் கீழே இறங்கி கப்ஸா வூட்ஸுடன் தரமற்ற செய்திகளுக்கு போட்டிபோடுகிறது. மேலும் சூப்பர் ஸ்டார் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை உள்ளபடி தெரிவிக்காமல் தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களையே வெளியிட்டு வக்கிரத்தை காண்பித்து வருகின்றனர். உங்கள் பொன்னான நேரத்தை மேற்படி தளங்களுக்கு சென்று வீணடிக்கவேண்டாம்.

துக்ளக்கின் ‘முதல்வர்’ செண்டிமென்ட்டும், ரஜினியின் கட்டுரையும

நம்மில் பலருக்கு கீழ்கண்ட சந்தேகங்கள் அடிக்கடி தோன்றுவது உண்டு:
விடை சிலருக்கு தெரிந்திருக்கலாம். சிலருக்கு தெரியாம லிருக்கலாம். தெரிந்து கொள்ள இதோ ஒரு வாய்ப்பு.நெருக்கடியான காலகட்டங்களில் சூப்பர் ஸ்டாரின் மனநிலை எப்படியிருக்கும்?தமக்கு ஏற்படும் கடும் சோதனையை பற்றி அவர் என்ன நினைப்பார்?அதே போல மிகப் பெரிய வெற்றிகளை அவர் குவிக்கும்போதும் அவர் மன நிலை எப்படி இருக்கும்?புகழுரைகள கேட்க நேரிடும்போது அதை எப்படி அவர் எடுத்துகொள்கிறார் ?வாழ்க்கையில் நாம் படும் கஷ்டங்களைப் பற்றி அவர் பார்வை என்ன?பணக் கஷ்டத்தை மீறி ஏதாவது கஷ்டம் உண்டா?
இவ்வாறு எனக்குள் அடிக்கடி கேட்டுக்கொள்வதுண்டு. அதற்கான விடையை இதோ சூப்பர் ஸ்டாரே தருகிறார்.
அது மட்டுமா…இறைவனை யாருக்கு பிடிக்காது?சுகமும் துக்கமும் வாழ்க்கையில் மாறி மாறி வருவது ஏன்?“வந்தாரை வாழவைக்கும் தமிழகம்” என்று ஏன் கூறுகிறார்கள்?தமிழர்கள் யாருக்கு தங்கள் இதயத்தில் இடம் கொடுப்பார்கள்?
இது போன்ற கேள்விகளுக்கும் தலைவர் சும்மா ‘நச்’ ‘நச்’ என்று ஒரு கட்டுரையில் பதிலளித்திருக்கிறார்.
எங்கே… எப்படி?
1996 ஆம் ஆண்டு துவக்கத்தில் - துக்ளக் இதழில் - “அந்த ஐந்து விழாக்கள்” என்னும் தலைப்பில் ரஜினி ஒரு தொடர்கட்டுரை எழுதினார்.
சராசரி மனிதனுக்கு ஏற்படும் கஷ்டங்கள் குறித்த அவரது பார்வை மிகவும் அற்புதம். தவிர மனிதனுக்கு பணக் கஷ்டத்தை விட அதிக வேதனை தரக்கூடியது எதுவென்றும் பட்டியலிட்டிருக்கிறார். பிரச்னைகளை பற்றி மட்டும் அலசாமல் அதற்க்கு தீர்வு சொல்லும் பண்பும் ரஜினிக்கு இருக்கிறது என்று நான் முன்பே சுட்டிக் காட்டியிருந்தேன். இதோ இந்த கட்டுரையிலும் நம் பிரச்னைகளை எப்படி நாம் தீர்த்துகொள்வது என்று கூறியிருக்கிறார். அன்றாடம் ஆயிரத்தெட்டு பிரச்னைகளில் சிக்கித்தவிப்பவர்களுக்கு மிக நல்லதொரு வழியை காட்டியிருக்கிறார் என் குரு ரஜினிகாந்த் அவர்கள். (படியுங்கள்… நீங்களும் அவரை இப்போதே குருவாக ஏற்றுகொள்வீர்கள்).
எனக்கிருக்கும் வியப்பெல்லாம் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பே அவருக்கு இத்தகைய ஒரு முதிர்ச்சி இருந்ததென்றால் இப்போது அவர் எத்துனை பக்குவப்பட்டிருப்பார் என்று எண்ணும்போது உண்மையில் என்னால் வியப்பை அடக்கமுடியவில்லை.
தலைவா, நீ அரியனை ஏற தாமதிக்கும் ஒவ்வொரு கணமும், இந்த நாட்டு மக்களுக்கு பேரிழப்பு….!!
துக்ளக்கும் தமிழக முதல்வர்களும்
சரி, இந்த தொடர் துக்ளக்கில் ஆரம்பித்த வரலாறு உங்களுக்கு தெரியுமா?
துக்ளக்கிற்கு ஒரு சிறப்பு உண்டு. துக்ளக்கில் தொடர் எழுதுபவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுவிடுவார்கள். அப்படி ஒரு ராசி அந்த பத்திரிக்கைக்கு உண்டு.
துக்ளக்கில் தொடர் எழுதி அதற்க்கு பிறகு தமிழக முதல்வரானவர்கள் இருவர்: ஒருவர் எம்.ஜி.ஆர், மற்றொருவர் ஜெயலலிதா. சூப்பர் ஸ்டார் விஷயத்தில் இந்த செண்டிமெண்ட் கொஞ்சம் தாமதமாகிறது என்று நினைக்கிறேன். அவ்வளவுதான்.
இந்த தொடரை சூப்பர் ஸ்டார் தாமாகவே மனமுவந்து எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்க்கு காரணம் முதல்வராகும் ஆசை அல்ல. சோ மீது அவர் கொண்ட பிரியம்.
சோவை நச்சரித்த அவரது ஊழியர்கள்
1995-1996 காலகட்டங்களில் தி.மு.க. - த.மா.கா. கூட்டணியை உருவாக்கி தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்களுள் சோவும் ஒருவர். ஏற்கனவே அவர் ரஜினிக்கு நெருங்கிய நண்பர்தான் என்றாலும், அந்த சூழ்நிலையில் ரஜினியை அடிக்கடி சந்திக்கும் பொன்னான வாய்ப்பை அவர் பெற்றார். ஆகையால் முன்னெப்போதையும்விட அவர்களது நட்பு ஆழமாக மாறியது. இந்த சூழ்நிலையில் சோவை அவரது அலுவலக ஊழியர்கள் “நீங்கள் என் ரஜினியிடம் உங்கள் நட்பை பயன்படுத்தி நம் இதழுக்கு கட்டுரை எழுதித்தருமாறு கேட்கக்கூடாது?” என்று நெருக்க ஆரம்பித்தனர். ஆனால் சோவோ, “எனக்கு அவரிடம் உள்ள நட்பை இப்படி சுயநலத்துக்காக பயன்படுத்த நான் விரும்பவில்லை. அவராக கேட்கட்டும் பார்க்கலாம்,” என்று கூறி சமாளித்துவந்தார்.
சோவிடம் ரஜினி கேட்ட வாய்ப்பு
இதற்க்கிடையே ரஜினியாகவே சோவிடம் ஒரு நாள், “என்னிடம் கட்டுரை எழுதித்தருமாறு கேட்கவே மாட்டீர்களா?” என்று கேட்டுவிட்டார். சூப்பர் ஸ்டார் இப்படி சோவிடம் கேட்கும் சமய்த்தில் அவருக்கு இந்த துக்ளக் செண்டிமெண்ட் பற்றியெல்லாம் எதுவும் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
“உங்களிடம் நான் கொண்டுள்ள நட்பை இந்த விடத்தில் பயன்படுத்திக்கொள்ள நான் விரும்பவில்லை. நீங்களாகவே கேட்டால் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். வேறொன்றுமில்லை. தாராளமாக எழுதிக்கொடுங்கள்” என்று சோ கூற, சூப்பர் ஸ்டார் இப்படியாக தொடர் எழுதலானார்.
அந்த தொடரின் ஒரு பாகம் தான் இது. வாழ்க்கை, தனது வெற்றி, தோல்வி, இவற்றை பற்றிய தனது கண்ணோட்டங்களை அதில் சூப்பர் ஸ்டார் சுவைபட கூறியிருந்தார். தவிர தனக்கும் ஜெவுக்கும் மோதல் ஏற்பட்ட முழு காரணங்களையும் சூழ்நிலைகளையும் அதில் விளக்கியிருந்தார். கிட்டத்தட்ட மூன்று மாதத்திற்கு அந்த கட்டுரை தொடர்ந்தது. அந்த கட்டுரையை அப்படியே எடுத்து நாளிதழ்கள் சுவையான் தலைப்புகளிட்டு வெளியிட்டு வந்தன.
கட்டுரை குறித்து சோ எழுதிய முன்னுரையில், “மக்களுக்கு பயன் தரும் கட்டுரைகள் ஜனரஞ்சகமாக இருப்பதில்லை. ஜனரஞ்சகமாக இருக்கும் கட்டுரைகள் மக்களுக்கு பயன் தருவதில்லை. ஆனால் ரஜினி எழுதும் இந்த தொடர் நிச்சயம் ஜனரஞ்சகமாக இருக்கும், உங்களுக்கும் பயன் தரும் விதத்திலும் இருக்கும்!” என்று கூறியிருந்தார்.
Related Posts Plugin for WordPress, Blogger...